திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன்.. பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன்.. பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

durai murugan tr baluதிராவிட முன்னேற்ற கழக கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது.

அந்த பதவியில் இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவியில் யாரையும் கட்சி நியமிக்கவில்லை.

அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி கூடுகிறது.

மேலும் பொருளாளர் பதவிக்கு யார்? தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தன.

இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த வேட்பு மனு தாக்கல் மாலை 4 மணியுடன் முடிந்தது .

இந்த பதவிகளுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்…

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அடடா.. அழகான தமிழ் தலைப்பை தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி

அடடா.. அழகான தமிழ் தலைப்பை தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antonyஅக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி ஆகிய படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அண்மையில் பிச்சைக்காரன் 2 படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதை அறிவித்தார்.

இந்த படத்தை தேசிய விருது பெற்ற பாரம் பட இயக்குனர் பிரியா இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மற்றொரு படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

விதார்த் நடித்த ‘ஆள்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஆனந்த் கிருஷ்ணன்.

இப்பட நாயகியாக ஆத்மிகா நடிக்கிறர். இவர் ஹிப்ஹாப் ஆதியின் ’மீசைய முறுக்கு’ படத்தில் நடித்தவர்.

இந்த திரைப்படத்துக்கு ’அன்பு இல்லையேல் ஓர் அணுவும் அசையாது’ என்ற அழகான தமிழ் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்..; தளபதிக்கு தயக்கமா..?

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்..; தளபதிக்கு தயக்கமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vetrimaranஎத்தனை வருடங்களாக தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன் என வைராக்கியத்தோடு இருக்கிறார் போல டைரக்டர் வெற்றிமாறன்.

கடந்த 13 ஆண்டுகளில் அவர் இயக்கிய மொத்த படங்கள் 5 மட்டுமே.

அதில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய தனது நான்கு படங்களிலும் தனுஷை இயக்கியிருந்தார்.

’விசாரணை’ படத்தில் தினேஷ் நடித்திருந்தாலும் அந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இதனையடுத்து சூர்யாவின் ’வாடிவாசல்’ என்ற படத்தை கலைப்புலி தானு தயாரிப்பில் இயக்குகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்.. விஜய்க்கான கதை தயார். அவரின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தளபதிக்கு வெற்றிமாறனை அழைப்பதில் என்ன தயக்கமோ? இந்த செய்தி அறிந்தவுடன் தயங்காமல் அழைப்பார் என நம்பலாம்.

மீண்டும் பவர் ஸ்டாருடன் களமிறங்கும் விஜய்-அஜித் படத்தயாரிப்பாளர்

மீண்டும் பவர் ஸ்டாருடன் களமிறங்கும் விஜய்-அஜித் படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pawan kalyan am ratnamகமல் நடித்த இந்தியன், விக்ரம் நடித்த பீமா, விஜய் நடித்த கில்லி, அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் ஏஎம் ரத்னம்.

இவர் தெலுங்கிலும் சில படங்களை தயாரித்துள்ளார்.

தெலுங்கில் 2006ம் ஆண்டு பவன் கல்யாண் நடித்த ‘பங்காரம்’ படத்தை தயாரித்தார்.

அதன்பின்னர் நேற்று பவன் கல்யாண் பிறந்தநாளை மீண்டும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தை தயாரிக்கவுள்ளதாக பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாணின் 27வது படமாக அது உருவாகவுள்ளது.

இந்த படம் சரித்திரப்படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது.

இதன் அறிவிப்பு போஸ்டர் அவ்வாறே டிசைன் செய்யப்பட்டுள்ளது.

யூடிப்பில் படம் லீக்..: முன்னாள் முதல்வரின் மனைவி போலீசில் புகார்

யூடிப்பில் படம் லீக்..: முன்னாள் முதல்வரின் மனைவி போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress kutty radhikaஜனநாதன் இயக்கத்தில் அருண்விஜய் அண்ட் ஷாம் இணைந்து நடித்த படம் ‘இயற்கை’.

இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் குட்டி ராதிகா.

அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.

கடந்த 2013ல் ‘ஸ்வீட்டி நானா ஜோடி’ என்ற கன்னட படத்தை தயாரித்து அதில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

அந்தப் படத்தை தயாரிப்பாளரின் அனுமதி பெறாமல் மர்ம நபர் யாரோ யூடியூப்பில் அப்லோட் செய்துள்ளனர்.

எனவே, இது குறித்து குட்டி ராதிகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் ஆன்லைன் ரிலீஸ்..?

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் ஆன்லைன் ரிலீஸ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv vikram varma2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்

தெலுங்கில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் பாலா இயக்க விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகி நடித்தார்.

இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்பட டீசர் வெளியாகி ஹிட்டானது. படமும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இதன் பின்னர் ‘ஆதித்யா வர்மா’ என்ற டைட்டிலில் அர்ஜுன் ரெட்டி படத்தில் பணியாற்றிய இயக்குநர் கிரிசய்யா இயக்கத்தில் மீண்டும் புதிதாக படம் உருவானது.

இந்த நிலையில் தற்போது பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

அமேசான் ப்ரைம் வீடியோவில் நவம்பர் 13-ம் தேதி ரிலீஸ் எனவும் கூறப்பட்டது.

ஆனால் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என தற்போது தயாரிப்பாளர் தரப்பில் தெரிய வந்துள்ளது.

More Articles
Follows