தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்.. – முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்.. – முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக. ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

அப்போது விருதுகளை வழங்கினார்.

பெரியார் விருது – மிசா மதிவாணன்

அண்ணா விருது – எல்.மூக்கையா

கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு

பேராசிரியர் விருது – முபாரக்

பாவேந்தர் விருது- வாசுகி ரமணன்

உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

முப்பெரும் விழாவில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில் முக்கியமானவை..

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்கிற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்.

9 மாவட்டங்களில் வருகிற‌ ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதன்பிறகு வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும்.

கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம்.

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல நல்லத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதங்களிலும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விழாவில் முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி – சில நினைவலைகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது..

DMK rule should no longer be permanent says MK Stalin

JUST IN ஹோட்டல் 11PM வரை.. BAR 10PM வரை.; புதுச்சேரி காரைக்காலில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

JUST IN ஹோட்டல் 11PM வரை.. BAR 10PM வரை.; புதுச்சேரி காரைக்காலில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

இதேபோல் மதுக்கடைகள் மொத்தம் மற்றும் சில்லறை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள் மற்றும் மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மேலும் கடற்கரை சாலைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்

இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lockdown extenstion in Pondy and Karaikkal

ஏழைகளின் ரியல் ஹீரோ சோனு சூட் இடங்களில் வருமான வரித்துறை சோதனை

ஏழைகளின் ரியல் ஹீரோ சோனு சூட் இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.

இவர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.

குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.

மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்

எனவே பொதுமக்கள் இவரை ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாகவே பார்த்தனர்.

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான 6 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என தகவல்கள் பரவியது.

மேலும் புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்தின் தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

I-T Department Raids 6 Places Linked To Bollywood Actor Sonu Sood

அண்ணாத்த எங்கள் ஆண்டவன்..; அதான் ரத்த அபிஷேகம்.; அது எப்படி அருவருப்பு..? ரஜினியிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

அண்ணாத்த எங்கள் ஆண்டவன்..; அதான் ரத்த அபிஷேகம்.; அது எப்படி அருவருப்பு..? ரஜினியிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த பட பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பொது வெளியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.

இது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதால் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.

மேலும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தது.

இதனையனுத்து அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டார்.

அதில்..

அண்ணாத்த போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த அறிக்கை நேரடியாக ரஜினி தரப்பில் வெளியாகாமல் அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் வெளியானது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள அருவருப்பு என்ற வார்த்தை ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது.

தீபாராதனை, பாலாபிசேகம், தேங்காய் உடைத்தல், பொங்கலிடுதல் போல ஆடு, கோழி வெட்டி கொண்டாடுவதும் கடவுள் வழிபாட்டு முறைகள் தான்.

கடவுளுக்கு நிகராக மதித்து செய்ததை.. இப்படி அருவருக்கத்தக்கது என சொல்ல தேவையுமில்லை. அப்டி சொல்வதே கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போலதான் என ரஜினிக்கு எதிராக அவரது ரசிகர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

Fans ask question to his idol Super Star Rajinikanth

ஆயுதபூஜை தினத்தன்று ஆர்யா படங்கள் மோதல்.; குஷ்பூ படத்தை வாங்கிய உதயநிதி

ஆயுதபூஜை தினத்தன்று ஆர்யா படங்கள் மோதல்.; குஷ்பூ படத்தை வாங்கிய உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கியவர் ஆனந்த் சங்கர்,.

இவர் விஷால் – ஆர்யா நடிப்பில் ’எனிமி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

இதே நாளில் ஆர்யாவின் மற்றொரு படமான ‘அரண்மனை 3’ படமும் வெளியாகிறது.

இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குனர் சுந்தர்.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, Benzz Media CEO R.மதன்குமார் ஆகியோர் இருந்தனர்.

அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.C
தயாரிப்பு – குஷ்பூ சுந்தர் Avni Cinemax, Benzz Media
இசை C.சத்யா,
வசனம் – பத்ரி
திரைக்கதை – வெங்கட் ராகவன்
ஒளிப்பதிவு – U.K.செந்தில் குமார்
படத்தொகுப்பு – பெனி ஆலிவர்
கலை – குருராஜ்.P
நடனம் – பிருந்தா, தினேஷ்
சண்டைப்பயிற்சி – பீட்டர் ஹெயின், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அகமது, சதீஷ் (AIM)

Arya 2 films to clash this pooja holidays

அப்பாவிடம் கற்காத இயக்கத்தை விஜய்யிடம் கற்றுக்கொண்ட ‘அனபெல் சேதுபதி’ இயக்குனர்

அப்பாவிடம் கற்காத இயக்கத்தை விஜய்யிடம் கற்றுக்கொண்ட ‘அனபெல் சேதுபதி’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம்,
G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபதி”.

விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, தீபக் சுந்தர்ராஜன் இணைந்து பத்திரிக்கையாளர் சந்தித்தனர்.

இந்நிகழ்வில்
இயக்குநர் R சுந்தர்ராஜன் பேசியதாவது..

நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உள்ளனர்.

எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு படத்தின் கதை தெரியாது படம் பற்றி எதுவும் தெரியாது, அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார் சந்தோஷமாக இருந்தது.

இங்கு வந்து பாடல்கள் டிரெய்லர் பார்த்த போது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பேசியதாவது….

தயாரிப்பாளர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி நடித்த அனைவருக்கும் நன்றி. இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம்.

உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள். அப்பாவிடம் மனித பண்புகளை தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் இயக்கத்தை நான் இயக்குநர் AL விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன்.

தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன் என்றார்.

“அனபெல் சேதுபதி” திரைப்படத்தை PASSION STUDIOS சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ளனர். இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி பண்ணு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜ சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா , யுவனேஷ் மற்றும் அஷ்வின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), கிருஷ்ணா கிஷோர் ( இசை ), வினோத் ராஜ்குமார் N (கலை), பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பாளர்), தினேஷ் (நடனம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்), N உதய் குமார் (ஒலி கலவை ) Sync Cinemas ( ஒலி அமைப்பு ) R மணிகண்டன் (VFX Supervisor), சந்தோஷ் (ஸ்டில்ஸ்), Tuney John 24 AM (விளம்பர வடிவமைப்பு), K சக்திவேல் (புரடக்சன் எக்ஸியூட்டிவ்), A குமார் (எக்ஸியூட்டிவ் புரடியூசர்),சுரேஷ் சந்திரா, ரேகா D’One (மக்கள் தொடர்பு).

Director Deepak Sundar Raj speech at Annabelle sethupathi press meet

More Articles
Follows