சூரி – கதை நாயகன்… விஜய்சேதுபதி – கதாநாயகன்..; இளையராஜா புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் பேச்சு

Vijay Sethupathi sooriசென்னை கோடம்பாக்கத்தில் (பழைய MM தியேட்டர்) தன் இசை பணிகளை தொடர புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

இன்று பிப்ரவரி 3 முதல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி – விஜய் சேதுபதி நடிக்கும் பட பாடல் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளார்.

(45 வருடங்களாக தன் இசை பணிகளை பிரசாத் ஸ்டூடியோவில் செய்து வந்தார். சில பிரச்சனைகளால் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

எனவே இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஜய் சேதுபதி பேசியதாவது…

“நான் இளையராஜாவின் பெரிய ரசிகன். அவர் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் வந்தாச்சு.

சூரி நாயகனாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதே சந்தோஷம்.

எங்க பட பாடல்கள் உருவாக்கம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் பணிபுரிய வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. என் வாழ்க்கையில் இந்த நாள் முக்கியமான நாள்.” என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் பேசியதாவது…, “இளையராஜாவின் இசையைக் கேட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம்.

ஒவ்வொரு பட உருவாக்கத்தின்போதும், அவருடைய பாடல்களை முன்வைத்தே பேசுவோம்.

இளையராஜா உடன் பணிபுரிவது, இந்தப் படத்தில் அமைந்திருப்பது சந்தோஷம்.

அவரின் புதிய ஸ்டுடியோவில் எங்கள் பட முதல் பாடல் ரெக்கார்டிங் நடக்கிறது என்பது இன்னொரு சந்தோஷம்.

இந்த படத்தின் கதை நாயகன் சூரிதான், கதாநாயகன் விஜய் சேதுபதி. சூரியின் மீதுதான் முழுக் கதையும் நடக்கும்.” என வெற்றிமாறன் பேசினார்.

சூரியின் அப்பாவாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Vetrimaaran talks about his upcoming film

Overall Rating : Not available

Latest Post