தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தான் பாஜகவில் சேரவுள்ளதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்தார் என்ற தகவலை பார்த்தோம்.
இது தொடர்பாக அவரின் அண்மை பேட்டியில்…. “விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும்.
மக்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் போது அவர் வருவார்.
நாங்களாக வருவதைவிட மக்கள் அழைக்கும்போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும்.
விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவே தற்போது முழுகவனம் செலுத்தி வருகிறேன்.
பாஜவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
Director SAC talks about Vijay’s Political entry










