தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.
இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.
தற்போது மீண்டும் விஜய்யை இயக்கவிருக்கிறார் லோகேஷ்.
அப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
இதுவும் லோகேஷின் வழக்கமான கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் எனத் தெரிகிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது.
இதனிடையே ட்விட்டர் & இன்ஸ்ட்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் லோகேஷ்.
இது தொடர்பான அவரது பதிவில்…
“நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொள்ள நினைக்கிறேன்.
விரைவில் எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் திரும்பி வருவேன். அதுவரை அனைவரையும் பார்த்துக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
Director Lokesh Kanagaraj took break from social medias