தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் அவர்கள் வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
பிரபல இயக்குனர் பாலா இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் நேரில் சென்று அளித்துள்ளர் துருவ்.
அப்போது அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.