தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்றைய காலகட்டங்களில் ஷோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபலமான நடிகைகளை பலோ பண்ணுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள் வரை சென்று சேர்ந்தவர் தர்ஷாகுப்தா.
மெகாஹிட் திரைப்படமான “திரௌபதி” படத்தின் இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படமான “ருத்ர தாண்டவம்” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் தர்ஷா குப்தா.
இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.
ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களை சந்திக்க நினைத்தார்.
சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு இந்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பினார்.
மதுரை, கன்னியாகுமாரி, திருச்சி, கோயமுத்தூர் என பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வந்தனர். 300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விருந்தும் சாப்பிட்டார்.
இந்தியாவில் ஒரு நடிகை தனது ஷோஷியல் மீடியா ரசிகர்களை சந்திப்பது, இதுவே முதல் முறையென்று நினைக்கிறோம்.
ரசிர்கள் கொடுத்த கிப்ட், பூங்கொத்துகளை பெற்றுக்கொண்ட தர்ஷாகுப்தா, ரசிகர்கள் கேட்ட பல்வேறு வகையான கிடுக்குப்பிடி கேள்விகளுக்கும் ரசித்துக்கொண்டே சாதுர்யமாக பதில் கூறினார்.
தர்ஷா குப்தா பேசும் போது எனக்கு 1 மில்லியன் பாலோயர்ஸ் வர நீங்கள் மட்டும் தான் காரணம். எனக்கு குடும்பம் என்பதே நீங்கள் தான்.
அதனால் தான் இந்த நிகழ்வை உங்களோடு கொண்டாட விரும்பினேன் என்று கூறினார்.
ரசிகர்களின் குடும்பத்தாரோடு வீடியோ காலில் பேசிய போது, உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள். சிலரால் ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.
தற்போது ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா மிகப்பெரிய பேனர் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.
Darsha Gupta’s treat to her fans