கேங்ஸ் ஆப் மெட்ராஸ்: மீண்டும் படம் இயக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்: மீண்டும் படம் இயக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cv kumarஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அடையாளம் காணப்பட்டவர் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என தரமான படங்களை கொடுத்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

இதனிடையில் ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவே, அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்குகிறார்.

ரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..?

ரசிகர்களுடன் போட்டோ எடுக்க மறுக்கும் அஜித்; பின்னணியில் சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala Ajith in viswasamநடிகர் அஜித்தை 4வது முறையாக விஸ்வாசம் படத்திற்காக இயக்கி வருகிறார் சிவா.

இப்படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்பில் நடிப்பதாக தெரிகிறது.

இதன் முதல் கட்ட சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது. அதில் வழக்கம்போல வெள்ளை முடி தாடியுடன் நடித்திருந்தார்.

இந்த சூட்டிங்கின் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இனி அடுத்த கெட் அப்பிற்காக மாறவுள்ளார் அஜித். அதில் கருத்த தலைமுடியுடன் நடிக்கவுள்ளார்.

இந்த போட்டோக்கள் லீக்காகி விடக்கூடாது என டைரக்டர் சிவா உறுதியான முடிவில் இருக்கிறாராம்.

எனவே அஜித்திடம் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை கொஞ்ச நாட்களுக்கு தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளாராம்.

இதற்கு அஜித்தும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

அஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி

அஜித் மிஸ் செய்த டைட்டிலை கெட்டியாக பிடித்த நட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natty aka Nataraj got God Father title for his movieபிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்ற நட்ராஜன் தற்போது நடிகராக பிஸியாகவுள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ படத்தை தொடர்ந்து இவரது நடிப்புக்கு பல வாய்ப்புகள் வந்தன.

‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காட் பாதர்’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இதன் சூட்டிங் சென்னை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அஜித் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்திற்கு ‘காட் பாதர்’ என முதலில் தலைப்பு வைத்திருந்தனர்.

ஆனால் அப்போது வரி விலக்கு காரணமாக ‘வரலாறு’ என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் விட்ட காட் பாதரை நட்டி பிடித்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Natty aka Nataraj got God Father title for his movie

ajith god father

எவருக்கும் பாதிப்பு இல்லாமல் எட்டு வழிச்சாலை அமைக்க விவேக் ஐடியா

எவருக்கும் பாதிப்பு இல்லாமல் எட்டு வழிச்சாலை அமைக்க விவேக் ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivek gave idea for 8 ways road from Chennai to Salemசென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலையானது தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த அமைகிறது.

தற்போது கூட சென்னையிலிருந்து சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.

ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும்.

இதனால் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது பயண நேரம் சுமார் 7 மணி நேரம் ஆகிறது.

புதிய பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும்.
கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள், வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நிறைய பேர் வாட்ஸ் அப்பில் கண்டிருக்கலாம்.

Actor Vivek gave idea for 8 ways road from Chennai to Salem

காலா-வை விட மெர்சல் அரசியலையே மக்கள் ஏத்துகிட்டாங்க : எஸ்ஏசி

காலா-வை விட மெர்சல் அரசியலையே மக்கள் ஏத்துகிட்டாங்க : எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays father SA Chandrasekar clarifies Kaala and Mersal movies political issueஅறிமுக இயக்குர் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து நடித்திருக்கும் படம் டிராபிக் ராமசாமி.

இப்படம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜீன் 22ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் வெளியீடு தொடர்பாக எஸ்ஏசி அண்மையில் ஒரு பேட்டியளித்தார்.

அதில் அவர் பேசியதாவது…

சமூகத்திற்காக போராடி வரும் டிராபிக் ராமசாமி கோமாளி போல சித்தரிக்கப்படுகிறார். அந்தை கருத்தை மாற்றுவதற்காகவே இந்த படத்தை தயாரித்துள்ளே.ன

இந்த காலத்தில் சமூக கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்கள் வெளிவருவது நல்ல விஷயம்.

அரசியல் பேசும் காலா போன்ற படங்களை விட, கமர்சியல் கலந்த ஜனரஞ்சகமான மெர்சல் போன்ற படங்களில் பேசப்படும் அரசியலைத்தான் மக்கள் விரும்பி ரசிக்கிறார்கள் என பேசினார்.
மேலும் அவர் பேசும்போது…

தன்னை விட விஜய்க்கு நிறைய அரசியல் தெரிந்திருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சென்று பார்த்ததற்கு அவரின் மனிதநேயம்தான் காரணம்,

விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களின் முதற்கட்ட அரசியல் பணி, அவர்களின் தெருவையும், ஊரையும் சுத்தம் செய்வதே எனவும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

Vijays father SA Chandrasekar clarifies Kaala and Mersal movies political issue

Breaking: மக்கள் நீதி மய்யத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் – கமல்

Breaking: மக்கள் நீதி மய்யத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Election Commission will give recognition to the MNM party soon says Kamalசில மாதங்களுக்கு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அதை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் கமல்ஹாசன்.

அப்போது கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் விண்ணப்பித்திருந்தார்.

அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து மறுப்பு தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது குறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

அதனால், மக்கள் நீதி மய்யம் கட்சியை முறையாக பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததை அடுத்து, இன்று கமல் டெல்லி சென்றார்.

டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்ளை சந்தித்த கமல்ஹாசன், விரைவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தினை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.

Election Commission will give recognition to the MNM party soon says Kamal

kamal at election commission office delhi

More Articles
Follows