நடிகர் சந்தானம் முன் ஜாமீன் நாளை ஒத்திவைப்பு

actor santhanamவளசரவாக்கத்தைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் என்பவர் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்டி தருவதாக கூறி நடிகர் சந்தானத்திடம் ரூ. 3 கோடி வாங்கிருந்தார்.

ஆனால் ஒப்பந்தம் செய்துக் கொண்டப்படி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லை என்பதால் சந்தானத்திற்கு அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் சண்முக சுந்தரத்தையும் அவர் வக்கீல் பிரேம் ஆனந்தையும் சந்தானம் தாக்கினார்.

இதனால் காயம் அடைந்த வக்கீல், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, சந்தானம் மீது 3 வழக்குகள் பாய்ந்தன.

எனவே அவரை போலீஸ் தேடியது. இதனால் தலைமறைவான சந்தானம், முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரவே, முன் ஜாமீன் மனுவை நாளை ஒத்திவைப்பு செய்துள்ளது கோர்ட்.

மேலும் தாக்குதலுக்கு ஆளான பிரேம் ஆனந்த்தின் சிகிச்சை குறித்து வளசரவாக்கம் போலீஸ் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post