சிவகார்த்திகேயன்-யோகி பாபு-ஐஸ்வர்யா-இமான்-கௌதம் மேனனுக்கு கலைமாமணி விருது..; செம கடுப்பில் தமிழக அரசு

sivakarthikeyanகலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் தொன்மையாக கலை வடிவங்களை பாதுகாக்கவும் உதவும் கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் கடந்த 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் இன்று வெளியானது.

இதில் பழம்பெறும் நடிகைகளான, சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடிகர் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர கலைஞர்கள் விவரம் வருமாறு…

நடிகைகள் தேவதர்ஷினி, மதுமிதா

இயக்குனர்கள்

கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா (நடிகர்)

இசையமைப்பாளர்கள், பாடகர்கள்:

டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து.

டிவி சீரியல் நடிகர்கள்

நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா

நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியல் (கலைமாமணி விருது) தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிர்வாகிகள் லீக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நிர்வாகம் மீது முதல்வர் அலுவலகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அதற்கான விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Complete details on Kalaimamani Awards 2021

Overall Rating : Not available

Latest Post