‘நடிக்கத் தெரியல; அதான் விலக முடிவு பண்ணிட்டேன்…’ ஆர்த்தி

‘நடிக்கத் தெரியல; அதான் விலக முடிவு பண்ணிட்டேன்…’ ஆர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actress Aarthiதமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் உள்ள தொடர்பு கடந்த 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

இதனால் திரை நட்சத்திரங்கள் அவ்வப்போது அரசியலில் தலை காட்டுவதுண்டு.

காமெடி நடிகையான ஆர்த்தி அதிமுக கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் திடீரென தன் அரசியல் பயணத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

சினிமாவிலும் சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறேன். ஆனால் அரசியல் மூலமாக நடித்து மக்களை ஏமாற்றத் தெரியவில்லை.

அதனை நான் விரும்பவில்லை. எனவே, அதிமுக கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Comedy Actress Aarthi decision about her status in Politics

‘கடுகு’ பார்த்து கதறி அழுத ராஜகுமாரன்-தேவயானி மகள்

‘கடுகு’ பார்த்து கதறி அழுத ராஜகுமாரன்-தேவயானி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajakumaran and Devayani daughtersஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடுகு.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற நடிகர் சூர்யா இன்று இப்படத்தை நிறைய அரங்குகளில் வெளியிட்டார்.

இப்படத்தை நடிகை தேவயானி-ராஜகுமாரன் தம்பதிகளின் இரண்டு மகள்களும் பார்த்துள்ளனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

மேலும் அதில் ராஜகுமாரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தன் அப்பாவின் சிறந்த நடிப்பை பார்த்த இவர்களின் மூத்த மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதே விட்டாராம்.

மேலும் இப்படம் குறித்து தேவயானி கூறியதாவது…

கடுகு படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலே இப்படத்திற்கு கிடைத்த வெற்றிதான்” என்று தெரிவித்தார்.

Rajakumaran and Devayani ‘s elder daughter cried after watching Kadugu movie

மறக்க முடியாத பிறந்தநாள் பரிசை செந்திலுக்கு கொடுத்தார் சூர்யா

மறக்க முடியாத பிறந்தநாள் பரிசை செந்திலுக்கு கொடுத்தார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Birthday gift to Comedy Actor Senthilவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், செந்தில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இசை அனிருத்.

இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் நடுவே செந்தில் அவர்களின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

அப்போது வாழைப்பழம் போன்ற கேக் ஒன்றை டிசைன் செய்து, அதை செந்திலுக்கு கொடுத்து மகிழ்வித்துள்ளார் சூர்யா.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த வாழைப்பழ காமெடி என்றைக்கும் மறக்க முடியாத ஒன்று.

அதை கொடுத்து தற்போது செந்திலின் இந்த பிறந்தநாளையும் மறக்கமுடியாமல் செய்துவிட்டனர் தானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினர்.

Suriyas Birthday gift to Comedy Actor Senthil

ராஜமவுலியின் பாகுபலி விழாவில் ரஜினிகாந்த்..?

ராஜமவுலியின் பாகுபலி விழாவில் ரஜினிகாந்த்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Rajamouliராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது.

ஒரே நாளில் மட்டும் இந்த ட்ரைலரை மட்டும் 50 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இப்படத்தின் தமிழ் பதிப்பு பாடல்களை வெளியிடவிருக்கிறார்களாம்.

சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவுக்கு கமல் இரங்கல்

எழுத்தாளர் அசோகமித்ரன் மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasan and Ashoka mithranஉடல்நலக்குறைவால் பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் (85) காலமானார்.

இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தன் இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.

அசோக்மித்திரன் பற்றி சில குறிப்புகள்…

1931ம் ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் தியாகராஜன்.

இவரது தண்ணீர் நாவல் வாசகர்களிடையே மிகப்பிரபலமானது.

அப்பாவின் சினேகிதர் என்ற சிறுகதை தொகுப்பிற்கு 1996ல் சாகித்ய அகாடமி விருதை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர், மானசரோவர், ஒன்றன் உள்ளிட்ட 15 நாவல்களையும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

சாரல் இலக்கியச் சிந்தனை, அக்சரா உள்ளிட்ட இலக்கிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ குறித்து ஸ்னேகா

சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ குறித்து ஸ்னேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and snehaமோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், பஹத்பாசில் உள்ளிட்ட நட்சத்திர பட்டளாமே நடித்து வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து தன் சமீபத்திய பேட்டியில் சினேகா கூறியதாவது…

‘பஹத் பாசில் உடன் ஏற்கனவே மலையாளப் படத்தில் நடித்திருக்கிறேன்.

அவரது ரசிகையான நான் இதில் அவருடன் ஜோடியாக நடிக்க உள்ளேன்.

இந்தப் படத்தின் கேரக்டருக்காக உடல் எடையை குறைத்துள்ளேன்.

என் கேரக்டர் இப்போதே சொல்வது நன்றாக இருக்காது.’ என்றார்.

More Articles
Follows