ராஜ்குமார் இயக்கத்தில் ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்

ராஜ்குமார் இயக்கத்தில் ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cheran next project Rajavukku Check Directed by Rajkumarநடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்த சேரன் சமீபகாலமாக நடிப்பு துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜெயம் ரவி நடித்த மழை படத்தை இயக்கியவர் ராஜ்குமார்.

அவர் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு ராஜாவுக்கு செக் என தலைப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில்தான் சேரன் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இது ஒரு த்ரில்லர் படம் என கூறப்பட்டாலும் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவை சொல்லும் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Cheran next project Rajavukku Check Directed by Rajkumar

விஜய் ரிலீல்தான் செய்தார்; கமல் ரியலாகவே செய்துவிட்டார்

விஜய் ரிலீல்தான் செய்தார்; கமல் ரியலாகவே செய்துவிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal at Harvard and Vijay in Mersal have connectionமெர்சல் படத்தின் ஆரம்ப காட்சியில் வேஷ்டி கட்டிக் கொண்டு விஜய் வருவார்.

ஆனால் அந்த ஏர்போர்ட்டில் இருக்கும் அதிகாரிகள் அவர் கட்டியிருக்கும் வேஷ்டியை பார்த்து பலரும் கிண்டல் செய்வார்கள்.

மேலும் ஒரு பேட்டிக்காக அவர் வெளிநாடு சென்றிருப்பார்.

அவர் மெர்சல் என்ற படத்தில் விஜய் ரீலீல் செய்ததை இன்று கமல்ஹாசன் ரியாலாகவே செய்து காட்டிவிட்டார்.

அமெரிக்கா நாட்டில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசி வருகிறார்.

இன்று பிரபலமான ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்ற சென்றிருந்தார்.

அப்போது தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal at Harvard and Vijay in Mersal have connection

kamal and vijay in dhothi

 

ஆன்மிக அரசியல் அப்டேட்ஸ்: உளவுத்துறைக்கே ரஜினி கொடுத்த ஷாக்

ஆன்மிக அரசியல் அப்டேட்ஸ்: உளவுத்துறைக்கே ரஜினி கொடுத்த ஷாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth political entry news updatesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ஆன்மிக அரசியல் பணிகளை ஆரம்பித்துவிட்டார்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் தன் காவலர்களை நியமித்து வருகிறார்.

மேலும் ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்படத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளை உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாம்.

இதனால் தன் ஆலோசனை இடத்தை மாற்ற முடிவு செய்த சூப்பர் ஸ்டார் ஏதாவது ஒரு காரில் சம்பந்தப்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு, காரிலேயே ஆலோசனையை முடித்து விடுகிறாராம்.

மேலும் இதற்காக அவர் பல கார்களை பயன்படுத்துகிறாராம். ஒரே காரில் பயணிக்காமல் சிறிது நேரம் ஒரு காரிலும் அதன் பின்னர் மற்றொரு காரிலும் பயணிக்கிறாராம்.

இவரின் இந்த செயல் உளவுத்துறைக்கே பெரும் ஷாக்காக அமைந்துள்ளதாம்.

Rajinikanth political entry news updates

நட்பு வேற; அரசியல் வேற; ரஜினியுடன் கூட்டணி பற்றி கமல் ஓபன் டாக்

நட்பு வேற; அரசியல் வேற; ரஜினியுடன் கூட்டணி பற்றி கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Friendship differ from Politics says Kamal about Rajiniவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி கமல் தன் கட்சி மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் தனது படப்பிடிப்பு பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் அங்கு ஹார்வர்டு பிசினஸ் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு கமல் பதிலளித்தார்.

அவற்றில் சில…

நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
ஆனால் நட்பு என்பது வேறு. அரசியல் என்பது வேறு.

ரஜினியின் தேர்தல் அறிவிக்கைக்காக காத்திருப்போம். அது காவிக்கான அரசியலாக இருக்காது என நம்புகிறேன்.

தமிழகத்தில் நிதி நிர்வாகம் சரியில்லை. எந்த காரணத்துக்காகவும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. ஓட்டுக்கு சில ஆயிரம் பணம் வாங்கினால் பல லட்சங்களை இழக்க நேரிடும்.

மேலும் அவர் தொடர்ந்து அங்கு பேசியதாவது…

2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்குகிறேன்.
நான் தேர்ந்தெடுக்கும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.

பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் மக்களுக்காக போராடினார்கள். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார், காந்தி எனது ஹீரோக்கள்.

நான் வித்தியாசமானவன் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன்.” இவ்வாறு கமல் பேசினார்.

Friendship differ from Politics says Kamal about Rajini

நாளை நமதே என்ற பெயரில் கமலின் புதிய இணையதளம்

நாளை நமதே என்ற பெயரில் கமலின் புதிய இணையதளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal launched naalainamadhe website for his political partyநடிகர், இயக்குனர் என பலர் அறிந்த போதிலும் அரசியல்வாதி என கையெழுத்திட்டு தன் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தியவர் கமல்ஹாசன்.

வருகிற பிப்ரவரி 27ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

அவரது கட்சியின் பெயர், கொடி மற்றும் நிர்வாகிகள் விபரத்தை அன்றே அறிவிக்க உள்ளார்.

தனது அரசியல் பணிக்காக ‘மய்யம்’ என்ற பெயரில் மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கியிருந்தார்.

தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் அந்த இணையதளம் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மய்யம் என்ற பெயரில் இருந்த இணையதளம் நாளை நமதே என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே.

இணைவதற்க்கு
//naalainamadhe.maiam.com/ என அந்த பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்வலர்கள் இணைந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் தங்களது பெயர், செல்போன் எண், மெயில் ஐடி, மாவட்டம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யலாம்.

முக்கியமாக, எந்தவகையில், எந்த துறையில் தங்களால் சமூக பணி செய்ய முடியுமென்பதை பதிவு செய்வோர் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kamal launched naalainamadhe website for his political party

kamal_naalai_namathe

தடைகளை உடைத்து பிப்ரவரி 16ல் வருகிறார் மேல்நாட்டு மருமகன்

தடைகளை உடைத்து பிப்ரவரி 16ல் வருகிறார் மேல்நாட்டு மருமகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajkamal starrer Melnaattu Marumagan movie release on 16th Feb 2018டிவி சீரியல்களில் பிரபலமான ராஜ்கமல் அண்மைக்காலமாக சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள மேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் பிப்ரவரி 16 ம் தேதி வெளியாகிறது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த ராஜ்கமல் பேசியதாவது…

இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்‌ஷன் மற்றும் டைரக்‌ஷன் மேற்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்..

தொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்..

குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS அவர்களுக்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்..

ஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த மேல்நாட்டு மருமகன், திரையிடுவதில் தாமதமானது.

அந்த இடைவேளையில் மேல்நாட்டு மருமகன் படத்தின் போட்டோஸ் பார்த்து “சண்டிக்குதிரை” என்னும் படத்திலும் எனக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது..

மிகுந்த போராட்டத்திற்க்குப் பிறகு வரும் பிப்ரவரி 16, மேல்நாட்டு மருமகன் படம் திரைக்கு வருகிறது.

இன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Rajkamal starrer Melnaattu Marumagan movie release on 16th Feb 2018

????????????????????????????????

More Articles
Follows