தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 10 நாட்களாக தமிழத்தை உலுக்கிய சம்பவம் ஸ்வாதி என்ற பெண் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கொடுமைதான்.
இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
நேற்று முன்தினம் கொலைக்காரன் ராம்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
இதனிடையில் அந்த கொலைக்காரனின் முகம் பத்திரிகைகளில் காவல் துறையினரால் வெளியிடப்பட்டது.
அந்த கொலைக்காரன் முகத்தை மார்ப்பிங் செய்த விஜய் ரசிகர்கள் அஜித் முகத்தை ஒட்ட வைத்துள்ளனர்.
அதுபோல் அஜித் ரசிகர்கள் விஜய் முகத்தையும் இணைத்துள்ளனர்.
என்னதான் நடிகர்களின் படங்களுக்குள் போட்டி இருந்தாலும், அவர்களுக்குள் அடித்து சண்டை போட்டுக் கொள்ளட்டும்.
அதை விடுத்து இதுபோன்ற விஷயங்களில் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்ளலாமா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் இது போன்ற ரசிகர்களின் செயலை கண்டித்தால் நன்றாக இருக்கும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.
https://www.youtube.com/watch?v=L0FiXsRKEsc