‘உங்க பேர மாத்தி இந்த பேர வச்சிக்குங்க…’ ஆதிக்கு ரசிகர் அட்வைஸ்

‘உங்க பேர மாத்தி இந்த பேர வச்சிக்குங்க…’ ஆதிக்கு ரசிகர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hip hop aadhiஜல்லிக்கட்டு மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களில் தன் பங்களிப்பை செய்து வருபவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

இந்நிலையில் ஹிப்ஹாப் என்பது மேலை நாட்டு கலையை குறிக்கிறது.

எனவே நாட்டுப்புற ஆதின்னு பேர வச்சுக்குங்க என்று ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்து ஆதி கூறியுள்ளதாவது…

என்னுடைய பெயர் ஆதித்யா.

வாட்ஸ் அப், பேஸ்புக், செல்போன்கள் எல்லாம் மேலை நாட்டு, தொழில்நுட்பம்தான் அதுக்காக..?

ஏதாச்சும் பேசனும்னு பேசுறீங்களா? என்று தெரிவித்துள்ளார்.

Change your name – A request to Hip Hop Thamizha Adhi

#Hiphop #Tamizha change ur pseudo name to #naatu #pura #Tamizha.. Cos anything foriegn must be banned and boycotted. @hiphoptamizha

Hiphop Tamizha ‏@hiphoptamizha
my name is adhithya bro & y using twitter, fb, watsapp or even mobiles – they r also foreign. Pesanumey nu

ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் நடையை கட்டிய முதல்வர்

ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் நடையை கட்டிய முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

o paneer selvamஜல்லிக்கட்டு தொடர்பான நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தால் தமிழக அவசர சட்டம் பிறப்பித்தது.

ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் என பொதுமக்களும் இளைஞர்களுடன் இணைந்து போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன.

இதனால் தமிழகமே ஸ்தம்பித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அங்குள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பின்னர் நத்தம் தொகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி அங்கு ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆனாலும் அங்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் சென்னை திரும்பி விட்டார்.

இனி மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவித்தார்.

இவை ஒருபுறம் இருக்க புதுக்கோட்டையில் அரசு சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

ஆனால் அங்கு ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர்கள் விளையாட்டின் போது மரணம் அடைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம்… ஜகா வாங்கிய ஹிப்ஹாப் ஆதி

ஜல்லிக்கட்டு போராட்டம்… ஜகா வாங்கிய ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hiphop aadhiஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தொடங்கும் முன்பே டக்கரு டக்கரு என்ற ஜல்லிக்கட்டு பாடலை பாடி ஆதரவு அளித்தவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

மேலும் இது தொடர்பான நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டார்.

ஆனால் சென்னை மெரினா பீச் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதனிடையில் இப்போராட்டம் மோடி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரை பற்றி தனி மனித தாக்குதலை நடத்துகிறது.

மேலும் தமிழ்நாடு தனி நாடு, தேசிய கொடி அவமதிப்பு போன்றவற்றை முன்னிறுத்துகிறது.

இதில் எனக்கு உடன்பாடில்லை. போராட்டம் பாதை மாறி செல்வதில் நான் விரும்பவில்லை.

தற்போது அவசர சட்டம் வந்து விட்டது.

இனி தற்போது போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றார்.

இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்களின் போராட்டம்.

இதில் என்னுடைய பங்கு மிகக்குறைவு தான்.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்/

என் போட்டோவை பயன்படுத்தி அரசியலை இணைக்கின்றனர்.

எனக்கு அதற்கான அனுபவம் இல்லை” என்று வீடியோ பதிவை தன் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘ப்ரீ செக்ஸ்’ புகழ் ராதா ராஜனை திட்டி தீர்த்த சதீஷ்

‘ப்ரீ செக்ஸ்’ புகழ் ராதா ராஜனை திட்டி தீர்த்த சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

peta radha rajan sathishஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என இளைஞர்கள் மெரினாவில் போராடி வருகிறார்கள்.

இதுகுறித்து பீட்டாவை சேர்ந்த ராதா ராஜன் என்ற 62 வயது பாட்டி கூறும்போது…

ப்ரீ செக்ஸ் (இலவச உடலுறவு) என்று சொன்னால் இப்படித்தான் இளைஞர்கள் மெரினாவில் கூடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் உருவானது.

சென்னையிலுள்ள அவரது வீட்டை முற்றுகை இட முயன்றனர்.

இந்நிலையில் அவரின் பேச்சை கண்டித்து நடிகர் சதீஷ் கூறியுள்ளதாவது…

Sathish ‏@actorsathish
RadhaRajan_ Ungal veettu pengal Marina vandhalum paadhukaappu koduppargal engal Thamizh ilaignargal. Engal unarvugalai kochaippaduththadhe

Sathish ‏@actorsathish
RadhaaRajan don’t use such a bloody bad words. Peta ku edhira poradum engalai oru paattikku edhira porada vekkaadha.

Actor Sathish reaction to Free Sex fame Peta RadhaRajans speech

‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி

‘ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்…’ அலங்காநல்லூரில் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marina Protest Jallikattuஜல்லிக்கட்டுக்கு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.

நாளை நடைபெற உள்ள இப்போட்டியை துவங்க வைக்க இன்று இரவு மதுரை செல்லவிருக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்றாக தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு வந்த உடன் நடத்தி விடமுடியாது. அதற்கான நேரம் எல்லாம் பார்க்க வேண்டும்.

ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் இது அவசர சட்டம் மட்டும்தான். நிரந்தர சட்டம் வரும்வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இதே கருத்தை மெரினாவில் போராடும் புரட்சி இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் காட்சிப்படுத்தப்படாத விலங்காக காளையை அறிவிக்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும்.

அதுவரை போராட்டக்காரர்கள் யாரும் கலைய வேண்டாம் என அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இதுபோன்றே கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் போராடும் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார் கவர்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidyasagar-raoஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து அவசர சட்டம் பிறப்பிக்க இன்று சென்னை வந்தார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.

அதன்படி சற்றுமுன் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளது.

வருகிற ஜனவரி 23ஆம் தேதி இதற்கான சட்டம் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் நாளை காலை ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என சொல்லப்படுகிறது.

எனவே இன்று இரவு மதுரைக்கு சென்று நாளை ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்கவிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

மேலும் ஓரிரு தினங்களில் மற்ற மாவட்டங்களுக்கு மற்ற அமைச்சர்கள் நேரில் சென்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

குறிப்பு : இந்த சட்டம் குறைந்தபட்சம் 6 மாத காலம் அமலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Tamil Nadu Governor Vidyasagar Rao Issued Ordinance on Jallikattu

More Articles
Follows