தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய்க்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே விஜய்க்கு அரசியலின் நுழையும் எண்ணம் ஏற்பட்டது.
அதன்படி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்களும் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.
விஜய்யின் அரசியலை எண்ணத்திற்கு பக்க பலமாக பாலமாக இருந்து வருபவர் புஸ்ஸி ஆனந்த்.
இந்த நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை எடுத்து இன்று நவம்பர் 3ம் தேதி நள்ளிரவில் விஜய் மருத்துவமனைக்கு சென்று ஆனந்த்தை பார்த்து நலம் விசாரித்தார்.
தற்போது புஸ்ஸி ஆனந்த் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bussy Anand hospitalized Vijay met him at hospital.