தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமா படத்தில் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் ‘யாரு டா மகேஷ்?’ என்ற பட மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
அதன் பின் ‘மாநகரம்’, கண்ணாடி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமானார்.
தற்போது தெலுங்கு சினிமாக்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் சந்தீப் கிஷன்.
இந்த படத்திற்கு தெலுங்கில் ‘ஏ1 எக்ஸ்பிரஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இப்படத்தைத் தொடர்ந்து, கோனா வெங்கட் தயாரிப்பில் ஜி.நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தீப் கிஷன்.
இப்படத்துக்கு செளவ்ரஷ்டா ராம் என்பவர் இசையமைக்கிறார்.
தற்போது இப்பட வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் போலீஸ் அதிகாரியாக என்கௌண்டர் ரவி என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
‘டிஸ்கோ ராஜா’ என்ற தெலுங்குப் படத்தில் ஏற்கெனவே பாபி சிம்ஹா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bobby Simha plays antogonist in Rowdy Baby