சிவா இயக்கும் தல 57 படத்தில்…
...Read More
தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கிவிட்டதால், தன் அடுத்த படத்திலும் டாப் ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் அட்லி.
எனவே, அஜித்தின் தல 58 படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தன் ஏபிசிஎல் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பே அஜித், விக்ரம், மகேஸ்வரி இணைந்த உல்லாசம் படத்தை அமிதாப் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் கூட்டணி அமையும் பட்சத்தில் அதனை வரவேற்க ரசிகர்கள் அதிகளவில் காத்திருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.