அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி..; விவேக்குக்கு அஞ்சலி செலுத்தி சூட்டிங்கை தொடங்கினர்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி..; விவேக்குக்கு அஞ்சலி செலுத்தி சூட்டிங்கை தொடங்கினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Article 15 Tamil (2)“Article 15” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார்.

இப்படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

M. செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா.C (விநியோக நிர்வாகம் – ரெட் ஜெயன்ட் மூவிஸ்) ஆகியோர் உடனிருந்தனர்.

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

Article 15 Tamil version kick starts today

ஓட்டு போடுற வயசு வந்துட்டா.. அப்படின்னா கொரோனா தடுப்பூசி போட்டே ஆகனும்..! அரசு உத்தரவு

ஓட்டு போடுற வயசு வந்துட்டா.. அப்படின்னா கொரோனா தடுப்பூசி போட்டே ஆகனும்..! அரசு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccineகொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடெங்கிலும் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அவரவர் நாட்டு மக்களை இந்தியா செல்ல அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது 3ஆவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு அளித்துள்ளது.

நம் இந்திய திருநாட்டில் வாக்களிக்க தகுதியான வயது 18 என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த உத்தரவுக்கு முன்பே 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி நிச்சயம் போட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Vaccine for all above 18 starting May 1

‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்

‘பசுமை கலாம்’ அமைப்பில் விவேக் பெயரை இணைக்க நடிகர் செல் முருகன் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pasumai Kalamபத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் திடீர் மறைவு நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவர் மறைந்தாலும் அவர் செய்து வந்த நலத்திட்டப்பணிகள் எந்தவித தொய்வின்றி நடக்க இருக்கின்றது.

கடந்த பதிமூன்று வருடங்களாக தமிழகமெங்கும் இதுவரைக்கும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் திரு.விவேக் அவர்களால் நடப்பட்டிருக்கின்றன.

இதற்காக பசுமை கலாம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவினரால் இயங்கி வருகின்றது.

இந்தக்குழுவில் திரு.செல் முருகன், தயாரிப்பாளர் திரு.லாரன்ஸ், திரு.அசோக் மற்றும் நண்பர்கள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதையே தொடர்ந்து பசுமை கலாம் என்ற பெயரோடு விவேக் அவர்களின் பெயரையும் சேர்த்து செயல்படுத்த சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதிய பெயர் மாற்றத்தோடு திரு.விவேக் அவர்களின் லட்சியமான ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் பணிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றது.

இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என “பசுமை கலாம்” அமைப்பு தெரிவித்துள்ளது.

cell murugan includes Vivek name in Pasumai Kalam

புதுச்சேரியிலும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு..; ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு

புதுச்சேரியிலும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு..; ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisai (2)தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

எனவே இந்த தோற்றம் இருந்து அனைத்து மக்களையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில்… புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு.

ஊரடங்கு அமல்படுத்தப்படும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று பொதுமக்களிடம் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரவு 8 மணிவரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்;

8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டும் அனுமதி் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Pondicherry L-G Tamilisai warns of partial lockdown amid Covid surge

கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று..; சூட்டிங் கேன்சல்

கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று..; சூட்டிங் கேன்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிவேகமாக பரவி வருகிறது கொரோனா.

பல நடிகர் – நடிகைகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சில கலைஞர்கள் இறந்தும் உள்ளனர்.

இந்த நிலையில், மகேஷ்பாபு – கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ’சர்காரு வாரி பாட்டா’.

இப்பட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.

இந்த தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர்.

COVID 19 forces cancellation of Actress Keerthy Suresh’s milestone movie shooting

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கும் ஜோடியாகும் ‘தளபதி 65’ ஹீரோயின்.?

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கும் ஜோடியாகும் ‘தளபதி 65’ ஹீரோயின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 65’.

அனிருத் இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது.

இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இந்தப் படத்தில் தான் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Pooja hegde to romance Suriya ?

Suriya

More Articles
Follows