தன் மாமா விக்ரம் போல பெண் வேஷம் போடும் அர்ஜுமன்

தன் மாமா விக்ரம் போல பெண் வேஷம் போடும் அர்ஜுமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjuman vikramதாதா 87 பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG).

இதன் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.,

புதுமுகம் அர்ஜுமன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

அர்ஜுமன் நடிகர் விக்ரமின் உடன் பிறந்த சகோதரி அனிதாவின் மகன் ஆவார்.

இந்த ஜோடியுடன் பிக்பாஸ் ஜுலி, அனித்ரா, ரித்திகா சரண், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன், கதிர், KPY யோகி என பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியில் அர்ஜுமனின் பிறந்தநாளை முன்னிட்டு PUBG படத்தில் இவரது 5 விதமான தோற்றங்களை அன்று வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதில் ஒன்று பெண் வேடம் என தெரிய வந்துள்ளது.

கந்தசாமி படத்தில் நடிகர் விக்ரம் பெண் வேடம் ஏற்று நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாக நுழைந்தோம்.. நல்லதும் கெட்டதும் பார்த்தோம்.. அஜித் பற்றி வனிதா

ஒன்றாக நுழைந்தோம்.. நல்லதும் கெட்டதும் பார்த்தோம்.. அஜித் பற்றி வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumar ajithதல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அவரது ரசிகர்கள் இந்த நிறைவு விழாவை ஸ்பெஷல் காமென் டிபியை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

பல பிரபலங்கள் இந்த டிபி.யை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வனிதாவும் ஒரு காமென் டிபியை பதிவிட்டு அஜித்தைப் பற்றி தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில்…

“நம்ப முடியாதது. ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் நல்லதையும், மோசமானதையும் பார்த்தோம்.

அஜித் இந்த வெற்றிக்கு தகுதியானவர். நான் சந்தித்த மிக உண்மையான மனிதர்களில் ஒருவர்.

உங்களுக்கும், ஷாலினிக்கும் அனைத்து சிறப்புகளையும் கடவுள் கொடுப்பார்” என வனிதா பதிவிட்டுள்ளார்.

சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமல்-சூரி மீன் பிடித்த விவகாரம்.; 3 வனத்துறையினர் பணியிடம் மாற்றம்

விமல்-சூரி மீன் பிடித்த விவகாரம்.; 3 வனத்துறையினர் பணியிடம் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vimal sooriகொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு கடந்த 15-ம் தேதி நடிகர்கள் விமல் சூரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இதனால் அவர்களுக்கு இபாஸ் கிடைத்தது எப்படி? வனத்துறையினர் எப்படி வனப்பகுதியில் அனுமதித்தனர் உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.

அந்த பகுதியில் அனுமதியில்லாமல் விமல் சூரி இருவரும் மீன் பிடித்ததால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விமல் சூரி அங்கிருந்த போது பணியில் இருந்த வனக்காவலர்கள் இருவர் மற்றும் வனக்காப்பாளர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

அக்ஷய்குமார் தனுஷ் இணையும் படம் அக்டோபரில் மீண்டும் ஆரம்பம்

அக்ஷய்குமார் தனுஷ் இணையும் படம் அக்டோபரில் மீண்டும் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atrangi reகோலிவுட்டை கலக்கும் தனுஷ் அவர்கள் ‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

மேலும் ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார்.

தற்போது மீண்டும் ‘ராஞ்சனா’ இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் ‘அத்ராங்கி ரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார்.

மார்ச் மாதத்தில் இப்பட சூட்டிங் தொடங்கப்பட்டு பின்னர் கொரானோ பாதிப்பால் நின்றது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் கதை பல ஊர்களில் நடப்பது போல உள்ளதாம். எனவே மதுரையிலும் இப்பட காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர்.

சிலம்பம் பாட்டிக்கு உதவி; மகள்களை மாடாக்கிய விவசாயிக்கு உதவி.. ரியல் ஹீரோவானார் சோனு சூட்

சிலம்பம் பாட்டிக்கு உதவி; மகள்களை மாடாக்கிய விவசாயிக்கு உதவி.. ரியல் ஹீரோவானார் சோனு சூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sonu soodவிஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனு சூட்.

சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்த கொரோனா ஊரடங்கில் மிகப்பெரிய உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை தனது சொந்த செலவில் பல பஸ்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

ரஜினி-சிம்பு பட வில்லனுக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்; ஏன் தெரியுமா?

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வயதான பெண்மணி ஒருவர் சிலம்பம் சுற்றி வித்தை காட்டி பிச்சை எடுத்து வந்தார். இந்த வீடியோ வைரலானது.

இதனையறிந்த நடிகர் சோனு சூட் அந்த பாட்டியை அழைத்து பெண்களுக்கான சிலம்ப பயிற்சி பள்ளியை துவங்க சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறார்..

இதனையடுத்து ஆந்திரா சித்தூரில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு தன்னிடம் மாடுகள் இல்லாததால் தனது இரண்டு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் அவர்களின் நிலத்தை உழுவதற்கு உடனடியாக ஒரு புதிய டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.

சினிமாவில் வில்லனாக ஜொலித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக இருக்கிறார் சோனு சூட். அவருக்கு வாழ்த்துக்கள்.

பப்ஜி உள்ளிட்ட 275 வீடியோ கேம்ஸ்க்கு மத்திய அரசு தடை.?

பப்ஜி உள்ளிட்ட 275 வீடியோ கேம்ஸ்க்கு மத்திய அரசு தடை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pubg ban indiaகம்ப்யூட்டர்… லேப்டாப்… முக்கியமாக நம்மை செல்போன் ஆக்ரமித்துள்ள நிலையில் பலர் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகவே உள்ளனர்.

பல விளையாட்டுக்கள் பிரபலமாக இருந்தாலும் ஆன்லைன் விளையாட்டுகளில் பப்ஜி முக்கியமானதாக மாறியுள்ளது.

சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதனால் சிலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதால் பப்ஜிக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த விளையாட்டுக்கு பெற்றோர் அனுமதி மறுக்கப்பட்டதால் அண்மையில் ஒரு 10ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக் கொண்டான்.

இந்த நிலையில் இந்தியாவில் சமீபத்தில் ஹலோ, டிக்டாக், சேர்சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சீன செயலிகளையும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

தற்போது சுமார் 275 சீன செயலிகள் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

பப்ஜியின் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்கு உள்ளாகியிருப்பதால் அந்த செயலியும் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

பப்ஜி விளையாட்டை உருவாக்கியது கொரிய நிறுவனமான ப்ளூஹோல் நிறுவனம் தான் என்றாலும், சீனாவை மையமாக கொண்ட டென்செண்ட் நிறுவனம் இதன் அதிகமான ஷேர் (பங்குகளை) வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows