தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனு சூட்.
சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் ஹிந்தி சினிமாவில் உலகில் மிக பிரபலம்.
இந்த நிலையில் இவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
குறிப்பாக வெளி மாநிலங்களில் சிக்கிய அந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.
சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சித்தார். ஆனால் விமான அனுமதி கிடைக்கவில்லையாம்.
எனவே பஸ் மூலம் மும்பையில் சிக்கிய 200 தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனவே அவருக்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர்.
இது குறித்து சோனு சூட் கூறியதாவது..
நானும் ஒரு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர் தான். மும்பைக்கு பெரிய கனவோடு வந்தவன்.
பசியால் வாடும் நபர்களை பார்க்கும் போது என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.
பாம்பேக்கு ட்ரெய்னில் வந்தேன். கழிவறைக்கு அருகே படுத்து இருந்தேன். எனக்கு அதன் வலி எனக்கு தெரியும்” என கூறியுள்ளார்.
Sonu Sood Sends 200 Tamil peoples to their Homes They Show Gratitude by Aarti