அமலா பால்-விஜய் விவாகரத்து…? இதான் காரணமா.?

அமலா பால்-விஜய் விவாகரத்து…? இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Are Amala Paul and AL Vijay heading for a divorceவிக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்த தெய்வத்திருமகள் படத்தை டைரக்டர் விஜய் இயக்கினார்.

அப்படத்தின் போது டைரக்டர் விஜய்-அமலா பாலுக்கிடையே காதல் உருவாக, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014-இல் திருமணம் செய்து கொண்டனர்.

பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பதில்லை. ஆனாலும் அமலா பால் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பை தொடர்ந்தார்.

இது விஜய் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், இதுவரை இருவர் தரப்பிலும் எவ்வித மறுப்பு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘கபாலியை இப்படி பண்ணீட்டாரே ரஞ்சித்…’ – லட்சுமி ராமகிருஷ்ணன்

‘கபாலியை இப்படி பண்ணீட்டாரே ரஞ்சித்…’ – லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lakshmi ramakrishan comments about Kabali ranjithரஜினியின் நடிப்பில் உருவான கபாலி, உலகம் முழுவதும் கடந்த ஜுலை 22ம் ரிலீஸ் ஆனது.

இப்படம் பெரும்பாலான ரஜினி ரசிகர்களை கவரவில்லை என கூறப்படுகிறது.

பொதுமக்களிடமும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் வேளையில் வசூலில் எவ்வித குறைவும் இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படம் குறித்து தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“கபாலியை மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்றுமில்லை. மெட்ராஸ் படத்தின் கலைஞர்கள் யாரும் கவரவில்லை. ரஞ்சித் ஏமாற்றிவிட்டார்.” என பதிவிட்டுள்ளார்.

Watching #Kabali, where is the entertainment? All of #Madras actors made no impression, not @beemji cup of tea may be! Had lots of hope:(
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki)

அதிரடியான அறிவிப்புகளை அறிவிக்கும் ‘ரெமோ’ டீம்.

அதிரடியான அறிவிப்புகளை அறிவிக்கும் ‘ரெமோ’ டீம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Remo sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து செஞ்சிட்டாளே சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

படம் வெளியாக (அக்டோபர் 7ஆம் தேதி) இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வெளியீட்டை முன்கூட்டியே அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் வியபாரம் குறித்த அறிவிப்பை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அறிவித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி இப்படத்தின் வியாபாரம் தொடங்கவுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

#Remo business opens from 2nd August, 2016.
contact us +91 9944410024. [email protected]

அக்னி நட்சத்திரம் ரீமேக்: கார்த்திக் வேடத்தில் தனுஷ். பிரபு யார்.?

அக்னி நட்சத்திரம் ரீமேக்: கார்த்திக் வேடத்தில் தனுஷ். பிரபு யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushதனுஷ் நடித்துள்ள தொடரி வருகிற ஆகஸ்ட் 12ஆம் ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து கொடி, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகிவிடும்.

தற்போது வட சென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ், விரைவில் மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

ரஞ்சனா, ஷமிதாப் ஆகிய படங்களை தொடர்ந்து இவர் நடிக்கும் மூன்றவாது இந்தி படம் இது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா ஆகியோர் நடித்த அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்தான் இப்படம்.

இதில் கார்த்திக் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். மற்ற வேடங்களில் நடிக்கவுள்ள கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

விக்ரம்-ஜீவா நடிப்பில் வெளியான டேவிட் படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

‘கபாலி’ ரஞ்சித்துக்காக அதிரடி பயிற்சியில் சூர்யா

‘கபாலி’ ரஞ்சித்துக்காக அதிரடி பயிற்சியில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya stillsமெட்ராஸ் படத்தை இயக்கிய பின்னர் சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க இருந்தார் ரஞ்சித்.

இதனிடையில் கபாலி வாய்ப்பு வரவே, ரஜினியை இயக்கினார் ரஞ்சித்.

தற்போது கபாலி கடமைகள் முடிந்துவிட, சூர்யா படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

இப்படம் வட சென்னை பகுதியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது.

மேலும் இதில் பாக்சிங் காட்சிகள் அதிகமுள்ளதால் சூர்யா அதற்காக தன் உடலமைப்பில் மாற்றம் செய்து மோதவிருக்கிறாரம்.

சிங்கம் படத்தை முடித்துவிட்டு இதற்கான பயிற்சியில் ஈடுபட துவங்கவிருக்கிறார் சூர்யா.

ரஜினி ரசிகர்களுக்காக ‘கபாலி’ க்ளைமாக்ஸ் மாற்றம்

ரஜினி ரசிகர்களுக்காக ‘கபாலி’ க்ளைமாக்ஸ் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali climax changed dut to rajini fans requestரஜினியை நேசிக்கும் அவரது ரசிகர்கள் அவர் உடல் நிலை சரியில்லாத போது அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

அப்படிப்பட்ட ரசிகர்கள் கபாலி படத்தில் நெகட்டிவ்வான க்ளைமாக்ஸ் இருக்கும்போது விட்டு விடுவார்களா என்ன?

கபாலி ரிலீஸ் முதல் நாள் இடம் பெற்றிருந்த க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

எனவே தற்போது மலேசிய காவல்துறையினரிடம் கபாலி சரணடைந்தார் என மாற்றம் செய்து திரையிட்டு வருகின்றனர்.

ஆனால் இக்காட்சி மலேசியாவில் மட்டும்தான் மாற்றமடைந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஒருவேளை தமிழகத்திலும் மாற்றம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

படத்தின் வெளியீட்டின் போதே செளந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லியிருந்தார்கள்.

ஆனால் ரஞ்சித் பிடிவாதமாக இருந்து மாற்றாமல் இருந்தார்.

தற்போது ரசிகர்களுக்காக க்ளைமாக்ஸ் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows