தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2018ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன.
வருகிற நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை பிரபலப்படுத்தும் விதமாக ஜெய்ஹிந்த் இந்தியா என்ற ஆல்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.
இதற்கான புரொமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 45 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஷாரூக்கான், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான், டிரம்மர் சிவமணி, ஸ்வேதா மோகன் மற்றும் ஹாக்கி அணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.