கமல்ஹாசனை இயக்க பயப்படும் முருகதாஸ்..; ஏன் தெரியுமா?

கமல்ஹாசனை இயக்க பயப்படும் முருகதாஸ்..; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் டாப் ஹீரோக்களை இயக்கியவர் ஏஆர். முருகதாஸ்.

ஆனால் இவர் உலகநாயகன் கமல்ஹாசனை மட்டும இன்னும் இயக்கவில்லை.

இது தொடர்பாக பலர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கு அவருடைய ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

இதற்கான பதிலாக ஒரு பேட்டியில், ”கமல்ஹாசன் அவர்கள் இந்த நூற்றாண்டின் அற்புத கலைஞர். தனது எல்லா படங்களிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்.

அவரை வைத்து நம்மால் படம் இயக்க முடியுமா? அந்தளவு நமக்கு அறிவு உண்டா என்ற பயம் எனக்குள் இருக்கும்.

நிச்சயம் அவரை வைத்து இயக்குவேன். அந்தப்படம் என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார் ஏஆர். முருகதாஸ்.

ar murugadoss talks about film with kamal haasan

தயாரிப்பாளர்களுக்கு ஒரு வழின்னா.. எங்களுக்கும் ஒரு வழி இருக்கு..;- திருப்பூர் சுப்ரமணியம்

தயாரிப்பாளர்களுக்கு ஒரு வழின்னா.. எங்களுக்கும் ஒரு வழி இருக்கு..;- திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tirupur subramanyam bharathi rajaபாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் இணைந்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில்…

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கியூப் அல்லது யுஎப்ஓ-க்கான கட்டணத்தை இனி வரும் காலங்களில் செலுத்த முடியாது.

திரைப்பட இடைவேளைகளில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வருவாயில் ஒரு பகுதியைத் தர வேண்டும்.

இத்துடன் சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தன் அண்மை பேட்டியில் கூறியிருப்பதாவது..

தயாரிப்பாளர்கள் சொல்லியுள்ள எந்த நிபந்தனையையும் ஏற்க முடியாது.

அவர்களின் அப்படி ஏற்காவிட்டால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்கள்.

அது அவர்கள் விருப்பம். விரும்பினால் ரிலீஸ் செய்யட்டும்.

விருப்மாவிட்டால் விட்டுவிடட்டும். படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.

திரைப்படங்களே ரிலீசாகவில்லை என்றால் கல்யாணம் மண்டபமாக நாங்கள் தியேட்டரை மாற்றிக்கொள்கிறோம்.

தயாரிப்பாளர்களுக்கு வழி இருக்கும் போது, எங்களுக்கு ஒரு வழி இருக்கும்.

தயாரிப்பாளர்கள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படுவது வாடிக்கையாகிவிடும். இனி தியேட்டர்கள் இருக்காது.” என தெரிவித்துள்ளார்.

tirupur subramanyam reply to bharathi raja

தல அஜித்தின் 61 படத்தை தயாரிக்கும் ‘பிகில்’ பட புரொடியூசர்.?

தல அஜித்தின் 61 படத்தை தயாரிக்கும் ‘பிகில்’ பட புரொடியூசர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith archana kalpathiஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட படங்களை தயாரித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ்..

இவர்கள் பிகில் படத்தை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.

“சில போலி செய்திகள் பரவி வருகின்றன. எனவே ஏ.ஜி.எஸ். சார்பில் விளக்கம் அளிக்கிறேன்.

நாங்கள் 2020-ம் ஆண்டில் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அடுத்த படத்திற்காக காத்திருக்கிறோம்”. என பதிவிட்டு நெட்டிசன்களால் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மாற்ற சொன்ன மாஸ்க்கையே விற்பனை செய்யும் மருத்துவமனை.. லிங்குசாமி கண்டனம்

மாற்ற சொன்ன மாஸ்க்கையே விற்பனை செய்யும் மருத்துவமனை.. லிங்குசாமி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lingusamyஆனந்தம், ரன், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி.

கமல் நடித்த உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார்.

தற்போது கொரோனா காலம் என்பதால் மாஸ்க் அணிந்தபடி ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அவரின் மாஸ்க் வைரஸை பரப்புவதாக கூறி அந்த குறிப்பிட்ட மாஸ்க்கை மாற்றும்படி அந்த மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளதாம்.

ஆனால் அதே மருத்துவமனை தான் இதே போல மாஸ்க்கையும் விற்கிறதாம்.

மாஸ்க்கை மாற்ற நான் தயார். ஆனால் அவர்கள் அந்த மாஸ்க் விற்பதை நிறுத்த வேண்டும் என லிங்குசாமி தன் ட்விட்டரில் ஆதங்கப்பட்டுள்ளார்.

Hospital asks tamil director lingusamy to change his mask

ரத யாத்திரைக்கு பாஜக. ப்ளான்..? டாக்டர் திவ்யா சத்யராஜ் எதிர்ப்பு

ரத யாத்திரைக்கு பாஜக. ப்ளான்..? டாக்டர் திவ்யா சத்யராஜ் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajமுன்பெல்லாம் இந்துக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையில் பிள்ளையார் சதுர்த்தியும் ஒன்றாக இருந்தது.

ஆனால் கடந்த 20 வருடங்களில் இது அரசியல்களமாக மாறிவிட்டது. பிள்ளையார் சிலைக்கு வீதிக்கு வீதி பாதுகாப்பு அளிப்பது வாடிக்கையாகிவிட்டது.

இதற்கு முக்கிய காரணங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்று.

அதுபோல் வட இந்தியாவில் பிரபலமான ரத யாத்திரை ஒன்றை தென்னிந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் பாஜ கட்சி.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த ரத யாத்திரை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனைடுத்து நடிகர் சத்யராஜ் மகளும் டாக்டருமான திவ்யா சத்யராஜ் ரத யாத்திரை அனுமதிக்கக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது.

கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் இருக்கிறது மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டாக்டர் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க “மகிழ்மதி” என்ற இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார் என்பதை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

Divya Sathyaraj opposing the bjp chariot procession

‘சைரா’ சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் நாகார்ஜுனா மகன் அகில்

‘சைரா’ சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் நாகார்ஜுனா மகன் அகில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director surender reddyசீரஞ்சீவி, அமிதாப், விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த பிரம்மாண்டமான படம் ‘சைரா’.

இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சுரேந்தர் ரெட்டியின் அடுத்த படம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரின் அடுத்த படத்தில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மகேஷ் பாபு நடித்த ‘சரிலேரு நீக்கவெரு’ என்ற படத்தை தயாரித்த ஏ.கே.எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த புதிய படத்தை தயாரிக்கின்றனர்.

Actor Akhil Akkineni to work with Sye Raa director Surender Reddy in his next

More Articles
Follows