சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த அனிருத்; #நண்பேன்டா

anirudh and skஇயக்குநர் பொன்ராம்-சிவகார்த்திகேயேன்-சூரி ஆகியோர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் சீமராஜா.

இந்த திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் நெப்போலியன், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் இசை வெளியீட்டு விழா கடந்த 3 ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதே நாளில் சீமராஜா படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதே நாளில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் திட்டம் போட தெரியல என்ற பாடல் வெளியாக இருப்பதாக படக் குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியிடப்படவில்லை.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் அனிருத்…

“இன்று (ஆகஸ்ட் 3) என் இனிய நண்பன் சீமராஜாவின் நாள். அதனால், ‘திட்டம் போடத் தெரியல’ பாடல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் பதிவிட்ட சிவகார்த்திகேயன்“உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் திட்டம் போடத் தெரியல பாடலும் வெளியாகிவிட்டது.

Overall Rating : Not available

Latest Post