இக்ளூ (IGLOO) படத்தில் இணையும் அம்ஜத் கான் & அஞ்சு குரியன்

Amjath Khan and Anju Kurian to play the young pair in Iglooடிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “IGLOO” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பாரத் மோகன்.

“IGLOO” நேர்மறையான விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜோடியை சுற்றி நடக்கும் ஒரு வலைப்பின்னல் கதை. பாதகமான சூழ்நிலையில் தான் நாம் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியை வாழ்கிறோம்.

துருவ நிலையில் வாழும் இக்ளூஸைப் போல நாம் வாழ்கிறோம். தரமான வாழ்க்கையின் தேர்வு நேர்மறையான சிந்தனையில் உள்ளது. ஊடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த கருவி.

நான் அதிகபட்சமாக அதைப் பயன்படுத்த விரும்புகிறேன். டிஜிட்டல் தளங்கள் என்னை போன்றவர்களுக்கு ஒரு ஷோரீல் ஆக இருக்கிறது. இந்த தளங்களை சரியான முறையில், சரியான காரணத்துக்காக பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

நடிகர் அம்ஜத் கான் மற்றும் அஞ்சு குரியன் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில், மிக பொருத்தமாக நடித்துள்ளனர். பக்ஸ் மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

குறிப்பிட்ட காலத்தில் இந்த திரைப்படத்தை ஆரம்பித்து முடிக்க திட்டமிட்டோம். அதை சாதித்தும் விட்டோம்.

இதை சாத்தியப்படுத்தும் எனது திறமையான குழுவினரின் மகத்தான முயற்சிகளுக்கு நன்றி. இசையமைப்பாளர் அரோல் கொரோலி மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

குகன் எஸ் பழனி ஒளிப்பதிவு செய்ய, ஜிகே பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். தாமஸ் குரியன் ஒலி வடிவமைப்பு, விஜய ஆதிநாதன் கலை, செந்தில் குமரன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.

Amjath Khan and Anju Kurian to play the young pair in Igloo

Overall Rating : Not available

Related News

Latest Post