‘அக்கா குருவி’-க்கு இளையராஜா உயிர் கொடுக்க சாமி உணர்வு கொடுத்துள்ளார்.; சிலிர்க்கும் சீமான்

‘அக்கா குருவி’-க்கு இளையராஜா உயிர் கொடுக்க சாமி உணர்வு கொடுத்துள்ளார்.; சிலிர்க்கும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சாமி இயக்கிய அக்கா குருவி படத்தை பார்த்து சீமான் பேசியதாவது :

என்னுடைய தம்பி இயக்குனர் சாமி தயாரித்து இயக்கிய படம் அக்காக் குருவி. உலகத் திரைப்பட விழாவில் மஜித் மஜிதி எடுத்த சில்ரன் ஆஃப் ஹெவன் பார்த்தோம். அப்படம் உலகப்புகழ் பெற்ற திரைப்படம்.

நாங்கள் வியந்து ரசித்த படம். அதை சாமி மறுபதிப்பு செய்து இருக்கிறார். ஆனால், அத்திரைப்படத்தை ஏனோதானோ என்று இல்லாமல் மிகுந்த பொறுப்புணர்வோடு கொஞ்சமும் சிதையாமல் எடுத்திருக்கிறார்.

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் 83 நிமிடங்கள். ஆனால் அக்கா குருவி 153 நிமிடங்கள் நீட்டித்திருக்கிறார். இருப்பினும், தேவையற்ற காட்சிகளை வலிந்து திணிக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு முதன்மையான உணர்வை கெடுக்காமல் மக்களின் ரசனைக்கு ஏற்ப திரைக்கதை அமைத்து சிறப்பாக செய்திருக்கிறார் தம்பி சாமி.

அதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருடைய முந்தைய படங்களை விட மிகவும் உணர்வுபூர்வமான கவித்துவமான காவியம் என்று தான் சொல்ல வேண்டும். இதில் என்னவென்றால் இதுபோன்ற படங்களில் தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள்.

ஆகையால், அவருடைய கனவு தொழிற்சாலை, முத்து மூவிஸ் என 9 பேர் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய திரையுலக சூழல் அப்படி ஆகிவிட்டது.

நட்சத்திரமாக நடித்து இருக்கும் குழந்தைகள் மிகவும் அருமையாக நடித்து இருந்தார்கள். மேலும், நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஆனாலும் புதுமுகங்கள் மாதிரி தெரியவில்லை அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி தங்களுடைய திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் பார்க்கும் உணர்வே எனக்கு வரவில்லை அந்த அளவிற்கு எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள். அது இப்படத்திற்கு பெரிய வெற்றி.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் உத்பல் வி. நாயனார் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். கலை இயக்குனர் என்னுடைய தம்பி வீரசமர்.

இசையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஈடு இணையற்ற இசை மேதை இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைத்து இருக்கிறார் என்பதைவிட ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும்.

இசையால் இப்படத்தை வருடிக் கொடுத்து இருக்கிறார். அண்ணன் இருக்க தனது பங்களிப்பை இளையராஜா கொடுத்திருக்கிறார். இப்படம் பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும். சாதாரண படத்திற்கு சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்தவர், இந்த மாதிரி படங்களை விடுவாரா என்ன?! மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

படம் திரையரங்கிற்கு வந்து ஓடுகிறது. என் அன்பு உறவுகள் அனைவரும் பார்க்க வேண்டும். அப்போதுதான் புதிதாக முயற்சிக்கும் படைப்பாளிகளுக்கு ஊக்கமும். நம்பிக்கையும் வரும். இது எனது அன்பான வேண்டுகோள்.

மேலும் இந்த வகையில் இப்படத்தை தவறவிடக் கூடாது குழந்தைகள் குடும்பம் குடும்பமாக பார்க்கவும்.

வன்முறை ஆபாசம் தேவையற்ற காட்சிகள் உரையாடல்கள் என்று ஒரு துளிகூட கிடையாது. மிக சிறந்த படைப்பு. இப்படிப்பட்ட ஒரு படத்தை யாரும் தயாரிக்க வில்லை என்றால் நாமே துணிந்து எடுப்போம் என்ற என்னுடைய தம்பி இயக்குனர் சாமிக்கு என்னுடைய பாராட்டுக்களும் நன்றியும்.

அவருக்கு துணையாக இருந்தவர்  என்னுடைய சகோதரர். இவர் ராஜு மதுரவனின் மைத்துனர். இவர்கள் அனைவரும் இணைந்து அவரவர்களுக்கு இயன்ற அளவு பணம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு போர்தான். சாமி 9 பேர் இணைந்து தயாரித்து இருக்கிறோம் என்றார். நாங்கள் 50 பேர் இணைந்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம் என்று கூறினேன். இதுபோன்ற முயற்சி எடுக்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஒருமுறை படம் பாருங்கள். படம் உங்களை உறுதியாக ஏமாற்றாது.. மிகுந்த மன நிறைவை தரும் சிறந்த படம். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

என்னுடைய பாராட்டை படைப்பாளிகளுக்கு, இப்படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு குறிப்பாக என்னுடைய தம்பி சாமிக்கு வாழ்த்துக்களை சொல்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.

இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம் என்றார் சீமான்.

Maestro Ilaiyaraaja given life to Akka Kuruvi says Seeman

BREAKING ரஜினியை அரசியலுக்கு வராவிடாமல் செய்தவர் அவரே..; உதயநிதி மேடையில் உளறிய யுகபாரதி

BREAKING ரஜினியை அரசியலுக்கு வராவிடாமல் செய்தவர் அவரே..; உதயநிதி மேடையில் உளறிய யுகபாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 பட தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்று தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் உருவாகியுள்ளார்.

‘கனா’ படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதியுடன், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜசேகர், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வசனங்களை தமிழரசன் எழுதியுள்ளார்.

கனா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்சாரில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

வருகிற மே 20ல் இப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் இன்று மே 9ல் சென்னை சத்யம் தியேட்டரில் ‘நெஞ்சுக்கு நீதி’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர் அன்பில் மகேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் இப்படத்தில் பாடல் எழுதியுள்ள யுகபாரதி பேசியதாவது…

அருண்ராஜாவே ஒரு பாடலாசிரியர். ரஜினிக்கு கபாலி படத்தில் ‘நெருப்புடா..’ என்ற பாடல் எழுதி அவரை அரசியலுக்கு வராவிடாமல் செய்து விட்டார்.”

அருண்ராஜாவின் நண்பர் சிவகார்த்திகேயனும் ஒரு பாடலாசிரியர் தான். அப்படி இருக்கையில் என்னை பாடல் எழுத அழைத்தார். அந்த பாடல் பற்றி இப்போது சொன்னால் சரியிருக்காது. பிறகு சொல்கிறேன்” என பேசினார்.

Yugabharathi talks about Rajini at Udhayanidhi movie audio launch

கமல் & சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்தார் சூர்யா – தனுஷ் பட நாயகி

கமல் & சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்தார் சூர்யா – தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதனையடுத்து சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் புதிய படத்தை தயாரிக்கிறது.

இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த நிலையில் தற்போது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி.

தமிழில் தனுஷுடன் ‘மாரி 2’ & சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan & Sai Pallavi collaborates with Kamal Haasan

இயக்குநர்கள் கதை சொன்னாலே பின்னணி இசை என்னுள் தோன்றும்..; – சிலிர்க்கும் சாம் சி.எஸ்.

இயக்குநர்கள் கதை சொன்னாலே பின்னணி இசை என்னுள் தோன்றும்..; – சிலிர்க்கும் சாம் சி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. அதே போல், அவரது இசையில் உருவாகும் திரைப்படங்களில் பின்னணி இசையும் அதிகளவில் பேசப்படும்.

நடிகர்கள் மாதவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் தன்னுடைய வித்தியாசமான பின்னணி இசையை வழங்கி, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பை வழங்கி, இயக்குநர்களின் கற்பனை கலந்த படைப்புகளை தன்னுடைய இனிமையான இசையாலும், தனித்துவமான மெல்லிசை மெட்டுகளாலும், பிரத்யேகமான துள்ளலிசைப் பாடல்களாலும், துடிப்புள்ள பின்னணி இசையாலும் உயிர்ப்பித்து வருகிறார்.

‘சாணி காயிதம்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையேயான உறவு குறித்து விவரிக்கையில் இடம்பெற்ற, ‘மலர்ந்தும் மலராத..’ என்ற பாடலின் நவீன வடிவம், இன்றைய இளம் தலைமுறை இசை ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் இணைந்து வடிவமைத்த நீளமான காட்சிகள் பலவற்றுக்கு, பார்வையாளர்களை சோர்வடையச் செய்யாமல் கதை மீது கவனத்தை செலுத்த இவரது பின்னணி இசை முதன்மையான காரணியாக இருந்தது என படத்தின் பின்னணி இசை குறித்து இணையத்தில் வெளியான பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவரது இசையில் உருவான பல பாடல்கள் இன்றும் இளந்தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘விக்ரம் வேதா’விற்கு பிறகு வெளியான ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘கைதி’ என பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி, வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் சாம் சி எஸ் அவர்களிடம், நீங்கள் பணியாற்றும் படங்களில் பின்னணி இசை பார்வையாளர்களால் அதிக அளவு ரசிக்கப்பட்டு பாராட்டப்படுகிறதே.. ஏன்? என கேட்டபோது…

” இயக்குநர்கள் கதையை முதன் முறையாக விவரிக்கும் போதே பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றிவிடும். கதாபாத்திரங்கள், கள சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு, இசை முழுவதுமாக மௌனிக்கப்பட வேண்டிய நிமிடங்கள், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள தருணங்கள்… ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு, என்னுடைய இசைக் கோர்வையை தொடங்குகிறேன்.

இயக்குநர்களின் வேண்டுகோள் அல்லது படக்குழுவினரின் இசை சார்ந்த கோரிக்கை ஏதேனும் இருந்தால் அவற்றையும் செவிமடுத்து பின்னணி இசையை தொடர்கிறேன்.

வித்தியாசமான ஒலி குறிப்புகள் மூலம் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கவும் முயற்சிக்கிறேன்.

கதை, திரைக்கதை, அதனுடைய பின்னணி இசையை எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எந்த பாணியிலான சினிமா என்பதையும் அவதானித்து பின்னணி இசையை வழங்குகிறேன்.

ரசிகர்களின் ரசனையையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து ஒரு ஒலியை வழங்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை கரவொலியாக உணர்கிறேன்.

பின்னணியிசைக்காக எடுக்கும் முயற்சிகளைப் போல், படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காகவும் பிரத்யேக தேடல் இருக்கும். பாடல்களை கதைகளமும், கதாப்பாத்திரமும், அதன் திரைக்கதையும் தான் தீர்மானிக்கிறது.

மாண்டேஜஸ் பாடல்கள் என்றாலும், அதிலும் ஒரு இசை சார்ந்த அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் பணியாற்றுகிறேன்.

இசை ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாக சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாக சேரவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.

மெட்டமைத்த பிறகு பாடல்கள் உருவாவதும், பாடல்கள் எழுதப்பட்ட பிறகு மெட்டுகள் உருவாதும் இயல்பு தான் என்றாலும், வெற்றிக்கரமான பாடல்கள் அமையவேண்டும் என்பது தான் இறுதி இலக்கு.

மேலும் என்னுடைய அனைத்து விதமான புதிய முயற்சிகளுக்கு என்றென்றும் ஆதரவளிக்கும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், இசைக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Music director Sam CS talks about his bgm work

அருண் விஜய்-சிவகார்த்திகேயன் மோதலை முடிவுக்கு கொண்டு வந்த ஆர்னவ்

அருண் விஜய்-சிவகார்த்திகேயன் மோதலை முடிவுக்கு கொண்டு வந்த ஆர்னவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

25 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார் அருண்விஜய். ஆனால் 2015ல் என்னை அறிந்தால் படம் வெளியான பிறகுதான் இவருக்கு சரியான ரீஎன்ட்ரி கிடைத்து வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார்.

ஆனால் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளே ஆகியுள்ளது.

ஒரு கட்டத்தில் மறைமுகமாக அருண்விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு லேசான மோதல் உருவானது. இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று மே 9ல் நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே தன் மகனுக்கு உங்கள் ஆசி மற்றும் வாழ்த்துக்கள் தேவை என அருண்விஜய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

(சமீபத்தில் வெளிவந்த ‘ஓ மை டாக்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஆர்னவ்.)

இதனையடுத்து “இனிய பிறந்தநாள் தம்பி. ‘ஓ மை டாக்’ படத்தில் உங்களது நடிப்பை ரசித்தேன். உங்களது நடிப்பிற்கும், படிப்பிற்கும் எனது வாழ்த்துகள்,” என ஆர்னவைப் பாராட்டியிருந்தார் சிவகார்த்திகேயன்.

அதற்கு அருண் விஜய், “உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பிரதர். ஆர்னவ்வை வாழ்த்தியதில் நீங்கள் உண்மையில் அன்பானவர். இதை நிச்சயம் ஆர்னவ்விடம் தெரியப்படுத்துகிறேன்,” என்று நன்றி தெரிவித்துள்ளார் அருண்.

ஆக இந்த சம்பவத்தால் தற்போது இவர்களின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது எனலாம்.

யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா?; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்?

Sivakarthikeyan puts an end to his clash with Actor Arun Vijay

கதை திருட்டை பேசும் ‘ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்’ படத்திற்கு அமைச்சர் ஆதரவு

கதை திருட்டை பேசும் ‘ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்’ படத்திற்கு அமைச்சர் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நூற்றாண்டு கண்ட தமிழ்சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை கதை திருட்டு.

கதை திருட்டை மையமாக வைத்து இதுவரை எந்த தமிழ்சினிமாவும் வரவில்லை. முதல் முறையாக கதை திருட்டை பேசும் படமாக உருவாகியிருக்கும் படம் “ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்”

கதைக்காக நடிகர்களா? கமர்ஷியலுக்காக நடிகர்களா? கதை முக்கியமாக? ஹீரோயிசம் முக்கியமாக? என்பதை பேசும் பொருளாக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்.

இந்தப் படத்தின் இறுதியில் சுமூகமான ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற “டுலெட்” பட கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன், “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தின் கதாநாயகன் ஆண்டனி, “நேரம்” “வெற்றிவேல்” படங்களின் இரண்டாம் கதாநாயகனான ஆனந்த் நாக், சுப்பிரமணியம் சிவா, “கயல்” வின்சென்ட் நகுல், விஜய் கெளரிஷ், தீக்ஷனா, மற்றும் தென்றல் ரகுநாதன் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் பழம்பெரும் வெற்றி இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: சதீஷ்குமார்

இசை: கெவின் டிகாஸ்டா

பாடல்: நிலவை பார்த்திபன்

எடிட்டிங்: வினோத் கண்ணன்

ஸ்டண்ட்: சரவணகுகன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சந்தோஷ் நம்பிராஜன்.

“ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்” சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செய்தித்துறை மற்றும் சினிமா ஊடகத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார்.

MINISTER M.P.SAMINATHAN LAUNCHED the first look poster of Movie #STARTCAMERAACTION

More Articles
Follows