கமல்-விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் மோகன்லால்..?

ajith mohan lal‘ஆராட்டு’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இது விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனராக அவதாரமெடுக்கிறார் லாலேட்டன் (எ) மோகன்லால்.

3டி-யில் உருவாகும் இந்த படத்திற்கு BARROZ என்று பெயரிட்டுள்ளனர்.

இது அரசர் காலத்து கதை என கூறப்படுகிறது. இதில் மோகன்லாலே நாயகனாக நடிக்கிறார்.

பிரித்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega and Rafael Amargo உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.

ஏற்கெனவே லூசிஃபர் என்ற படத்தில் மோகன்லாலை இயக்கியவர் பிருத்விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளை நாம் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் மோகன்லால் இயக்கும் இந்த 3டி படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அஜித்திடம் மோகன்லால் கேட்டுக் கொண்டதாகவும், அஜித் ஓகே சொன்னதாகவும் ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவியது.

ஆனால் பாரோஸ் படக்குழுவினர் இதை மறுத்துள்ளனர். அஜித் நடிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்வதால் தமிழ் நடிகர்கள் எவரேனும் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி எனவும் தெரிவித்துள்ளனர்.

கமலுடன் ‘உன்னை போல் ஒருவன்’, விஜய்யுடன் ஜில்லா & சூர்யாவுடன் ‘காப்பான்’ ஆகிய நேரடி தமிழ் படங்களில் மோகன்லால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith and Mohan Lal joins for a new movie ?

Overall Rating : Not available

Latest Post