தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜா குருசாமி இயக்கத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘காடப்புறா கலைக்குழு’.
இந்த படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது…
நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம்.
அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.
இயக்குநர் உடல் அளவிலும் மனதளவிலும் அதிக மெனக்கெடல் செய்துள்ளார், அவரது உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.
நடிகை சுவாதி முத்து பேசியதாவது…
முதலில் கடவுளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கு முதல் படம் படக்குழு அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். உங்கள் அனைவருக்கும் நன்றி, என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை, படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி.
After Mundasuppatti movie Kaadappura Kalaikuzhu says Subramani