யோகிபாபுவை நினைத்து சோக கீதம் பாடும் துணை நடிகை சுஜி

யோகிபாபுவை நினைத்து சோக கீதம் பாடும் துணை நடிகை சுஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suji pradeepa yogi babuரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட ஹீரோக்களில் படங்களின் முக்கியமான நடிகராகி விட்டார் யோகிபாபு.

ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இவருக்கு பல வருடங்களாக பெண் தேடிய நிலையில் அண்மையில் தான் பார்கவி என்ற பெண்ணை மணந்தார் யோகிபாபு.

இந்த நிலையில் இவரை நினைத்து இவரை ஒருதலையாக காதலித்த துணை நடிகை சுஜி பிரதீபா என்பவர் அவருக்கு திருமணமான நாள் முதல் டிக்டாக்கில் சோககீதங்களை பாடி வருகிறார்.

யோகிபாபுக்கு திருமணம் ஆகும் முன்பே இவர் இதுபோல செய்து வந்தாராம்.

தற்போது யோகிபாபுவின் திருமண போட்டோவை வைத்தும் பாடி வருகிறார்.

இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சட்டமன்றத்துல என்னைவிட நல்லாவே நடிக்கிறாங்க.. – கருணாஸ்

சட்டமன்றத்துல என்னைவிட நல்லாவே நடிக்கிறாங்க.. – கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karunasமணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “சங்கத்தலைவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட நடிகர் கருணாஸ் பேசுகையில்,

“இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்.

மேலும் அவர் பேசுகையில்…

“யாரோ கொடுத்த குரல் என்னோட குரல்னு சொல்றாங்க. வாட்ஸ் ஆப்பில் வருவதெல்லாம் உண்மைன்னு நினைச்சிக்கிறாங்க.

சட்டமன்றத்துல என்னைவிட எல்லாரும் பயங்கரமாக நடிக்கிறாங்க. அதனால மறுபடியும் நடிக்கவே வந்துவிட்டேன்.

தேனப்பனும் நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் இரவில் ஒன்றாக இருப்போம், அதனை மெரினா கடற்கரை அறியும்“ என்று பேசினார் கருணாஸ்.

தனுஷின் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய கருணாஸ் மனு

தனுஷின் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய கருணாஸ் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karunas demands ban on Karnan and Mari Selvaraj to be arrestedகலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங்கில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் லீக்காகி வைரல் ஆகி வருகிறது.

அந்த காட்சியில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பாக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது….

“1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்

தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.

குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karunas demands ban on Karnan and Mari Selvaraj to be arrested

Karunas demands ban on Karnan and Mari Selvaraj to be arrested

BREAKING 200 கோடி என மார்தட்டிக் கொள்வது அவமானம்; இந்தியன் 2 சூட்டிங்கில் இறந்தவர்களுக்கு கமல் 1 கோடி நிதியுதவி

BREAKING 200 கோடி என மார்தட்டிக் கொள்வது அவமானம்; இந்தியன் 2 சூட்டிங்கில் இறந்தவர்களுக்கு கமல் 1 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 accident Kamal announces Rs 1 crore to help இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் அறுந்து விழுந்தத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.

மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடத்திற்கு அருகிலிருந்த ஷங்கர் கதறி கொண்டு தலையில் அடித்துக கொண்டு அழுதார்.

நடிகர் கமல், லைகா நிறுவனம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் நடிகர்கள் தனுஷ், ஜிவி. பிரகாஷ் ஆகியோரும் தங்கல் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இறந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்திய பின் கமல் பேசியதாவது…

”நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். நான்கு நொடிகள் முன்பு வரை நானும் அங்கு தான் இருந்தேன்.

படப்பிடிப்பில் நடந்த இந்த விபத்தை என் குடும்பத்தில் நடந்ததாகக் கருதுகிறேன்.

சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.

கடைநிலை ஊழியர்களுக்கும் கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.

ரூ. 100 கோடி 200 கோடி என்று மார்தட்டுக்கொள்ளும் நம்மால் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Indian 2 accident Kamal announces Rs 1 crore to help

வறுமையில் வாடிய ஊர் மக்களுக்குஉதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்

வறுமையில் வாடிய ஊர் மக்களுக்குஉதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Motta Rajendran in Robin hoodஇருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ” ராபின்ஹூட் ”

இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இக்பால் அஸ்மி

இசை – ஸ்ரீநாத் விஜய்

பாடல்கள் – கபிலன்

வசனம் – ஜோதி அருணாச்சலம்

எடிட்டிங் – ஜோமின்

கலை – கே.எஸ்.வேணுகோபால்

நடனம் – நந்தா

தயாரிப்பு மேற்பார்வை – சார்ல்ஸ்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – ஜூட் மேய்னி, ஜனார்திக் சின்னராசா, ரமணா பாலா

கதை, திரைக்கதை , இயக்கம் – கார்த்திக் பழனியப்பன்.

படம் பற்றி இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது..

“நாற்பது வருடங்களுக்கு முன்பு மச்சம்பட்டி என்ற கிராமத்தில் மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். நமக்கு மழை பெய்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்குகிறார்கள். இந்த ஊர் மக்களுக்கு ஒரே நம்பிக்கை,ஆறுதல் எல்லாம் சுதந்திரப் போராட்டத் தியாகி ராமசாமி ஒருவரே. இந்தச் சூழ்நிலையில் அந்தக் கிராமத்தில் சின்னச் சின்ன திருட்டில் மொட்டை ராஜேந்திரன் குழு ஈடுபடுகின்றனர். இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவர , போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். புகார் கொடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நேரத்தில் அரசு மூலம் நமக்கு ஒரு நல்லது நடக்கப் போவதாக நினைத்து சந்தோஷப் படுகிறார்கள். அதற்கு தியாகி உயிருடன் இருந்தால் மட்டும் நடக்கும் என்ற சூழ்நிலையில் திடீரென தியாகி இறந்துவிடுகிறார். பிறகு மக்களுக்கு கிடைக்க இருந்த அரசின் பணத்தை ஊர் தலையாரி திட்டமிட்டு திருட நினைக்கிறார். இதை அறிந்த திருடன் மொட்டை ராஜேந்திரன் அவர்களின் சதி திட்டத்தை தடுத்து, அரசாங்க பணத்தை ஊர் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தாரா இல்லையா? என்பதை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம்.

இந்தப் படத்திற்காக மழை இல்லாமல் வறண்ட கிராமம் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள வல்லப்பன்பட்டி என்ற கிராமம் பல ஆண்டுகளாக மழையே வராமல் வறண்டுபோய் கிடந்தது. அங்கேயே படப்பிடிப்பை நடத்தினோம்,

ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுந்த போது வல்லப்பன்பட்டி மக்களே எதிர்பாராத ஒரு அதிசயம் நடந்தது. திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்தது. அதனால் ஊர்மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். எனக்கும் படக்குழுவினருக்கும் கனமழை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததை நினைத்தது மகிழ்ச்சி அடைந்தோம் என்கிறார் இயக்குனர் கார்த்திக் பழனியப்பன்.

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthikமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.
இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு பணியாற்றுகிறார்.
.
படம் பற்றி இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன் கூறியதாவது:

நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

அண்ணன் தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் அண்ணனாகவும் கதையின் நாயகனாகவும் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். அரசியல் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்திக் இந்தப்படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் அதுவே படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும். கார்த்திக் சாருக்கு முக்கிய படமாக இருக்கும்.

விவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் படத்தின் மையக் கரு. இதன் படப்பிடிப்பு நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்வநாயகி அம்மா கோவிலில் பிரமாண்டமான பூஜையுடன் துவங்கியது. ஒரே கட்டமாக பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது.

More Articles
Follows