ஏழு படங்கள் கை வசம்..; 13 கிலோ எடை குறைத்து ஜொலிக்கும் ஐஸ்வர்யா தத்தா

Aishwarya Duttaசினிமாவின் மீது தீவிர காதலும் அர்ப்பணிப்பும் கொண்ட நடிகை ஐஸ்வர்யா தான் நடிக்கும் “SSHHH” ஆந்தாலஜி படத்தின் கதாப்பாத்திரத்திற்காக புதியதோர் உச்சத்தை தொட்டுள்ளார்.

கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம்.

ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

திரைத்துறை மீதான காதல் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக SSHHH படத்தில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மைக்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து புத்தம் புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார்.

பிக்பாஸ் மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் அலேகா, PUBG, கூடவன், கன்னி தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் மற்றும் மிளிர் முதலான படங்களில் நடித்து வருகிறார்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைகளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் அமைந்திருக்கின்றன.

இப்படங்கள் தன் திரைவாழ்வின் முக்கியமான படங்களாக, திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார்.

Actress Aishwarya dutta sheds 13kgs for Sshh

Overall Rating : Not available

Latest Post