தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ’பீஸ்ட்’.
அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரித்து வருகிறது.
விஜய்யுடன் பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், ‘குக் வித் கோமாளி ‘புகழ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்பட முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. தற்போது சென்னையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஹரி – அருண் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபு அடுத்த நாள் ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள சுமார் 600 கிலோமீட்டர் விடிய விடிய பயணம் செய்துள்ளார்.
இவ்வளவு தூரம் வந்தாலும் ஓய்வே எடுக்காமல் காலையில் ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் யோகிபாபு என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Yogi Babu’s dedication for his new film