மீண்டும் விஜய்யுடன் இணைவதை உறுதிசெய்தார் விவேக்

Actor Vivek team up with Vijay for Thalapathy 63தெறி, மெர்சல் ஆகிய இரண்டு வெற்றி படங்களை விஜய்யுடன் இணைந்து கொடுத்தார் டைரக்டர் அட்லி.

தற்போது ஏஜிஎஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

இதுகுறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ தெரிவித்தனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இதன் சூட்டிங்கை தொடங்குகின்றனர்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை அறிவித்தாலும் படத்தில் நடிப்பவர்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தளபதி 63 படத்தில் தான் நடிக்கவுள்ளதை விவேக் உறுதி செய்துள்ளார்.

திருமலை, யூத், ஆதி, குருவி உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் விவேக் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

Actor Vivek team up with Vijay for Thalapathy 63

Overall Rating : Not available

Latest Post