கலாம் பிறந்தநாளில் ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களுக்கு விவேக் வேண்டுகோள்

Actor Vivek request to Rajini Vijay and Ajith fansசினிமா என்றில்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் விவேக்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வேண்டுகோள் படி ஒரு கோடி மரக்கன்றுகளைக் கடந்த சில வருடங்களாக நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தெரிவித்துள்ளதாவது…

அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூகத் தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து நெட்டிசன்கள் #plantforkalam என்ற ஹாஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

டிரெண்டிங் மட்டுமில்லாமல் நிஜத்திலும் மரத்தை நட்டு பாதுகாத்து வந்தால் அனைவருக்கும் நல்லதே.

Actor Vivek request to Rajini Vijay and Ajith fans

https://twitter.com/Actor_Vivek/status/1183617655384629249?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1183617655384629249&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fvivek-request-to-thala-and-thalapathy-fans%2Farticleshow%2F71579684.cms

Overall Rating : Not available

Latest Post