அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த விஜய்

அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay visits Anitha home and consoled her fatherநீட் தேர்வு பிரச்சினையால் +2ல் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியை தழுவிய அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

இச்சம்பவம் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பல போராட்டங்களை உருவாகியுள்ளது.

ரஜினி, கமல், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் தங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல் நபராக, அனிதா தற்கொலை செய்த அன்றே அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் விஜய் அவர்கள் அனிதா வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ஒரு லட்சம் ரூபாயை அவரது தந்தையிடம் கொடுத்துள்ளார்.

மேலும் எந்த விதமான உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். செய்து தருகிறேன் என அனிதாவின் தந்தையிடம் கூறினாராம்.

இதனால் தளபதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Actor Vijay visits Anitha home and consoled her father

vijay at anitha home

நதிகளை மீட்போம்; சத்குருவின் திட்டத்திற்கு ரஜினி வாய்ஸ்

நதிகளை மீட்போம்; சத்குருவின் திட்டத்திற்கு ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis support and given his voice for Sathgurus Rally for Riversபிரபலமான சத்குரு அவர்கள் நதிகளை மீட்போம் என்ற திட்டத்தை தொடங்கி அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அவரின் இந்த திட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ஆதரவை ஒரு வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…

ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை.

இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளை ஜீவநதியாக்க நதிகள் மீட்பு இயக்கத்தை தொடங்கி இருக்கும் சத்குரு அவர்களின் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

நீங்களும் உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றால் 80009 80009 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

Rajinis support and given his voice for Sathgurus Rally for Rivers

rally for rivers

முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு

முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Its official Simbu Vijay Sethupathi Jothika on board for Mani Ratnams nextமணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி, துல்கர் சல்மான், பகத்பாசில் உள்ளிட்டோர் நாயகர்களாக நடிக்கவுள்ளனர்.

இதில் ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இதில் உள்ள முக்கிய கேரக்டரில் சிம்பு நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பே மன்மதன், சரவணன் ஆகிய படங்களில் சிம்பு, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Its official Simbu Vijay Sethupathi Jothika on board for Mani Ratnams next

துருக்கியில் சிக்கிய துருவநட்சத்திரம்; உதவி கேட்ட கவுதம்மேனன்

துருக்கியில் சிக்கிய துருவநட்சத்திரம்; உதவி கேட்ட கவுதம்மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram gautam menonகௌதம்மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிதுவர்மா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் துருவ நட்சத்திரம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் சூட்டிங்கிற்காக இப்படக்குழுவினர் துருக்கி சென்றுள்ளனர்.

அங்கு சூட்டிங்கை முடித்துவிட்டு ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல்லுக்கு சாலைவழியாக சென்றுள்ளனர்.

அந்த நாட்டின் எல்லையில், உரிய ஆவணங்கள் இல்லை என்பதை காரணம் காட்டி படக்குழுவை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கவுதம்மேனன் பதிவிட்டுள்ளதாவது….

24 மணிநேரமாக துருக்கி எல்லையில் தாங்கள் தவித்து வருவதாக குறிப்பிட்டு, இதை படிக்கும் நீங்கள் எங்களுக்கு உதவுங்கள் என பதிவிட்டுள்ளார்.

அதன்பின்னர் மற்றொரு பதிவில் இங்குள்ளவர்கள் செய்த உதவியால் இப்போது அங்கிருந்து விடைபெறுகிறோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Dhruva Natchathiram team locked in Turkey country says Gautam menon

ரஜினி-கமல்-விஜய்-அஜித்துக்கு இணையானவர் மகேஷ்பாபு… தாணு பேச்சு

ரஜினி-கமல்-விஜய்-அஜித்துக்கு இணையானவர் மகேஷ்பாபு… தாணு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Thanu speech about Spyder and MaheshBabuமகேஷ்பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கலந்துக் கொண்டார்.

ஸ்பைடர் படத்தின் புரோமோசன் மற்றும் வெளியீட்டிற்கு என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

தமிழில் உள்ள 4 டாப் ஹீரோக்களுக்கு இணையானவர் மகேஷ்பாபு என பேசினார்.

அவர் கூறிய தமிழின் நான்கு டாப் ஹீரோக்கள் ரஜினி-கமல்-விஜய்-அஜித்தான் என்று நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரிந்திருக்குமே.

Producer Thanu speech about Spyder and MaheshBabu

விஷாலுடன் மோதலை தவிர்க்க சரத்குமார் போட்ட திட்டம்

விஷாலுடன் மோதலை தவிர்க்க சரத்குமார் போட்ட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar avoided clash with Vishal movie Thupparivalanவிஷால் நடித்துள்ள துப்பறிவாளன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள்2 ஆகிய இரண்டு படங்களும் வருகிற செப்டம்பர் 14/15ஆம் தேதிகளில் வெளியாகவிருந்தது.

இன்று துப்பறிவாளன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள்2 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது இதன் தயாரிப்பு நிறுவனமான கல்பதரு பிக்சர்ஸ்.

இதுகுறித்து படக்குழுவினர் கூறியுள்ளதாவது…

இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள்2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் புதிய ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 15ஆம் தேதி ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும்,  கிஷோர் நடித்துள்ள களத்தூர் கிராமம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sarathkumar avoided clash with Vishal movie Thupparivalan

More Articles
Follows