பணம் பிரச்சினை தகராறு; முன் ஜாமீன் கேட்ட சந்தானம் தலைமறைவு

பணம் பிரச்சினை தகராறு; முன் ஜாமீன் கேட்ட சந்தானம் தலைமறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Santhanam apply Anticipatory Bailவளசரவாக்கத்தைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் (54) என்பவரிடம் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார் சந்தானம்.

ஆனால், ஒப்பந்தம் செய்யப்படி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லையாம்.

கட்டிடமும் கட்டவில்லை. பணமும் வந்தபாடில்லை என்பதால் இருவருக்கும் மோதல் முற்றியது.

சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்கு தன் உதவியாளர் ரமேஷ் என்பவருடன் சென்றுள்ளார் சந்தானம்.

அப்போது பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற, சந்தானம் சண்முகசுந்தரத்தை தாக்கியுள்ளார்.

அப்போது சண்முகசுந்தரத்தின் நண்பர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை அடித்துள்ளார்.

இதனால் போலீஸில் இருதரப்பு புகார் கொடுக்க, தற்போது பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து புகாரை பெற்ற போலீஸார் இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சந்தானம் எனத் தெரிய வந்துள்ளது.

Actor Santhanam apply Anticipatory Bail

actor santhanam case

விஜய்க்கு வழிவிட்டு விலகிய வில்லன் விஷால்

விஜய்க்கு வழிவிட்டு விலகிய வில்லன் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vishalவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா தெலங்கானாவில் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அதே நாளில் விஷாலின் இரண்டு படங்கள் இந்த படத்துடன் மோதவுள்ளதை நாம் முன்பே நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

துப்பறிவாளன் படத்தின் தெலுங்கு பதிப்பு டிடெக்டிவ் என்ற பெயரில் வெளியாகிறது.

மேலும் மோகன்லால், ஹன்சிவா உடன் விஷால் இணைந்துள்ள வில்லன் என்ற மலையாள படம் கேரளாவில் வெளியாகிறது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் வில்லன் படத்தின் வெளியீட்டை கேரளாவில் தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

அதாவது அக்டோபர் 27ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

உன்னிக்கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தை லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

தலைவர்-தளபதிக்கு அடுத்த இடத்தை பிடித்த தல

தலைவர்-தளபதிக்கு அடுத்த இடத்தை பிடித்த தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay ajithதமிழகத்தின் அரசியலே சென்னை கோடம்பாக்கத்தை சுற்றி வரும்போது, சினிமா வியாபாரத்திற்கு மட்டும் சென்னை விதிவிலக்கா என்ன?

இந்நிலையில் இதுவரை வெளியான படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை செய்த படங்கள் இவைதான் என தகவல்கள் வந்துள்ளன.

அதில் அதிக வசூல் செய்த டாப்-5 படங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

பாகுபலி 2- ரூ 18.85 கோடி
கபாலி- ரூ 12.35 கோடி
தெறி- ரூ 11.5 கோடி
எந்திரன் – ரூ 11.2 கோடி
விவேகம்- ரூ 10.05 கோடி

2018 ஜனவரியில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்

2018 ஜனவரியில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and kamalதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகள், காஞ்சனா, ஷீலா, வைஜெயந்தி மாலா ஆகிய மூவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, கேளிக்கை வரியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், மலேசியாவில் நட்சத்திரக் கிரிக்கெட்டோ அல்லது கலைநிகழ்ச்சியோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விஷால் கூறினார்.

மேலும் நடிகர் சங்கம் கட்டி முடித்த பிறகுதான் தன் திருமணம் என உறுதியாக தெரிவித்தார் விஷால்.

மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்

மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

inox multiplesதிரையரங்க கட்டணம் 25 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அரசு அறிவித்துள்ளது.

உணவகங்களுடன் கூடிய மால்களில் செயல்பட்டுவரும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வரிகளுடன் சேர்த்து 207 ரூபாய் கட்டணமாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் இல்லாமல் 3 திரையரங்குகளுக்கு மேல் இருக்கின்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வரிகளுடன் சேர்த்து 164 ரூபாய் வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இருவகை மல்ட்டி பிளக்ஸ்களிலும் 15 வகையான நவீன வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது அதன்படி…

1. திரையரங்கில் முழுமையான குளிர்சாதன வசதி இருக்கவேண்டும்

2. 800 இருக்கைகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்

3. அமரும் பார்வையாளர் இருக்கை 20 அங்குலம் இருக்க வேண்டும்

4. இரு வரிசைகளுக்கான இடைவேளி 41.5 அங்குலம் இருக்க வேண்டும்

5. 100 சதவீதம் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்

6. டிஜிட்டல் முறையில் படம் திரையிடப்படவேண்டும்

7. டி.டி.எஸ். ஒலி அமைப்பு இருக்க வேண்டும்

8. மெயின் ஸ்பீக்கர்கள் 3 இருக்க வேண்டும்

9. three way speeckers இருக்க வேண்டும்

10. sround sound systam இருக்க வேண்டும்

11. நவீன கழிவறை வசதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

12. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாபி இருக்க வேண்டும்

13. நுழைவு சீட்டு கணினிமுறையில் வழங்கப்பட வேண்டும்

14. இணையத்தில் நுழைவு சீட்டு வழங்க வேண்டும்

15. நுழைவு சீட்டை வீடுகளுக்கு சென்று தரும் வசதி இருக்க வேண்டும்

5 வகையான வசதிகள் மட்டும் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வரிகளுடன் சேர்த்து 147 ரூபாய் கட்டணமாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1. திரையரங்கில் முழுமையான குளிர்சாதன வசதி இருக்க வேண்டும்

2. 800 இருக்கைகளுக்கு குறைவாக இருக்கலாம்

3. ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்

4. டிஜிட்டல் முறையில் படம் திரையிடப்பட வேண்டும்

5. டி.டி.எஸ் ஒலி அமைப்பு இருக்க வேண்டும்

மேற்கண்ட வசதிகள் இல்லாத திரையரங்குகள் மல்ட்டி பிளக்ஸ் என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது சட்டவிரோதம் என தெரிய வந்துள்ளது.

ரஜினியின் 2.0 பட இசை வெளியீட்டுக்கு 12 கோடி பட்ஜெட்

ரஜினியின் 2.0 பட இசை வெளியீட்டுக்கு 12 கோடி பட்ஜெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 stillsரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் ‘2.0’ படத்தை லைகா புரொடக்‌ஷன் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இதன் 3டி மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவினை வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விழாவுக்கு மட்டும் ரூ.12 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாம் லைக்கா.

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், டிரையிலர் வெளியீட்டை டிசம்பர் மாதம் சென்னையிலும் நடத்தவுள்ளனர்.

அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 26ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

More Articles
Follows