தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் பள்ளி பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
ஓரிரு தினங்களுக்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.
மாணவர்களின் நலனை கருதி பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விவேக் இது குறித்து கூறியதாவது…
பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம்.
ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.
என கூறியுள்ளார்..





