‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நுழையும் ஷிவானியின் முன்னாள் காதலர்.; இனிமேல் பாலாஜி Vs ஆசிம்..?

‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நுழையும் ஷிவானியின் முன்னாள் காதலர்.; இனிமேல் பாலாஜி Vs ஆசிம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

azeem actor in bigg boss‘பகல் நிலவு’ உள்ளிட்ட சீரியல் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி.

இந்த சீரியலில் நடித்த போதே ஆசிமை ஒருதலையாக காதலித்தார் ஷிவானி.

ஆனால் தன் காதலை ஆசிம் ஏற்கவில்லை என்பதால் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார் ஷிவானி நாராயணன்.

இதனையடுத்து தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தார் ஷிவானி.

தற்போது இந்த நிகழ்ச்சி 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது.

இதில் சக போட்டியாளரான பாலாஜி மீது ஓவர் பொஸஸிவ்வாக உள்ளார் ஷிவானி.

அவருடன் மற்ற பெண்களை பேச கூட அவர் விடுவதில்லை.

இந்நிலையில் ஷிவானியின் முன்னாள் காதலரான ஆசிமை வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வரவுள்ளனர்.

ஆசிம் என்ட்ரியாகும் சீன்ஸ் விரைவில் ஒளிபரப்பாகும்.

இனி இரண்டு காதலர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு என்ன செய்ய போகிறாரோ ஷிவானி..?

Actor Mohamed Azeem to enter Bigg Boss house

அதுல்யாவின் அலப்பறை… புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு

அதுல்யாவின் அலப்பறை… புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

athulya raviவரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’.

ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

இந்தப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக ஒப்பந்தமான போது, ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

அதற்கடுத்து வந்த காலகட்டத்தில் சுசீந்திரன், சமுத்திரக்கனி போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கு தான் மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டோம் என்கிற உணர்வு ஏற்பட்டு விட்டது.

எங்கள் படம் ஒவ்வொரு முறை சர்வதேச விருது பெற்ற போதெல்லாம் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட கூட மறுத்துவிட்டார்.

மேலும் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் என படத்தின் எந்த ஒரு புரமோஷனிலும் அவர் தனது பங்களிப்பை தரவில்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, படம் வெளியாகும் போது போஸ்டர் டிசைன் காக அதுல்யா ரவியின் போட்டோ ஷூட்டை நடத்த திட்டமிடிருந்தோம்.

ஆனால் அந்த போட்டோ ஷூட்டிற்கு கடந்த ஒரு வருடமாக 20 தடவைக்கும் மேலாக அவரை அழைத்து பார்த்தும் ஒவொவொரு தடவையும் ஏதோதோ காரணங்களை சொல்லி தட்டி கழித்து கொண்டே இருந்தார். இப்போதும் நவ 27 ஆம் தேதி ரிலீஸ்-க்கு எந்த ஒத்தொழைப்பும் தரவில்லை.

இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெரிய நடிகை ஆகிவிடவில்லை.. அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை..

இப்படி இருக்கையில், தமிழ் திரையுலகில், இன்னும் நன்றாக வளர்ந்து, தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டிய அதுல்யா, இப்படி மோசமான முன்னுதாரணமாக மாறிவிட்டது வேதனை அளிக்கிறது.

தனது சோஷியல் மீடியா பக்கத்தில், “நான் கோவை தமிழ் பொண்ணு” என பெருமை பீற்றிக்கொள்ளும் இதே அதுல்யா ரவிதான், ஒரு தமிழ் சினிமா தயாரிப்பாளாரின் வயிற்றிலும் அடிக்கிறார் என்பது வினோதமான ஒன்று..

தமிழ் நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள் என பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு..

ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே எங்கள் படத்தில் அதுல்யா ரவியை நடிக்கவைத்து விட்டு, தற்போது புரமோஷன் நிகழ்ச்சிக்க்கு கூட அவரை கெஞ்ச வேண்டிய நிலைக்குத்தான் எங்களை தள்ளியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் தான் நடித்த பெரிய இயக்குனர்களின் படங்கள் பெயரை மட்டுமே பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்பும் அதுல்யா, வாய்ப்பு இல்லாத காலத்தில் தனக்கு கிடைத்த சிறிய படங்களுக்கு பாராமுகம் காட்டுகிறார்.

இந்தப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப், படம் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்து, தற்போது வரை ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகமாக தனது பங்களிப்பை தந்து வருகிறார். படம் நன்றாக வந்திருக்கிறது, விருதுகளை வென்றிருக்கிறது, படம் வெளியாகும்போது தனக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார்.

ஆனால் அவருக்கு இருக்கும் நம்பிக்கையில், அர்ப்பணிப்பில் ஒரு சதவீதம் கூட அதுல்யா ரவிக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டே ஆகவேண்டும் என நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இதற்கான விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில்.

அனுஷ்கா, தமன்னா போன்ற முன்னணி கதாநாயகிகளே, தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும்போது, இன்னும் தமிழ் சினிமாவில் தனக்கென, ஒரு அடையாளத்தை கூட பெற்றிராத, அதுல்யா ரவியின் செயல், நிச்சயமாக அவரது வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பது மட்டும் உண்மை..

Yen Peyar Anandhan team blames Actress Athulya Ravi

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ரஜினி-தனுஷ் வாக்களிக்கவில்லை..; குஷ்பூ-சிவகார்த்திகேயன் வாக்கு பதிவு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ரஜினி-தனுஷ் வாக்களிக்கவில்லை..; குஷ்பூ-சிவகார்த்திகேயன் வாக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kushboo sivakarthikeyanஇன்று நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.

இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் வாக்களிக்கவில்லை!

இதற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Khushboo and sivakarthikeyan cast their vote in TFPC election 2020

நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லரை படமாக்கும் எழில்..; பார்த்திபன் & கௌதம் கூட்டணி

நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லரை படமாக்கும் எழில்..; பார்த்திபன் & கௌதம் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham karthik parthibanமுதன்முறையாக நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லர் கதையை படமாக்குகிறார் இயக்குநர் எழில்.

காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.விஜய்குமரன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில் ‘புரடக்‌ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக அழைக்கின்றனர்.

அண்மையில் இதன் சூட்டிங்கை சென்னையில் தொடங்கியுள்ளனர்.

Gautham Karthik and Parthiban joins for a thriller movie

வி.கே.ராமசாமி & நாகேஷ் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ ரீமேக்..; சிவனாக நடிக்கும் சந்தானம்..?

வி.கே.ராமசாமி & நாகேஷ் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ ரீமேக்..; சிவனாக நடிக்கும் சந்தானம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நகைச்சுவை நடிகர்களான வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் இணைந்து நடித்த படம் ‘ருத்ர தாண்டவம்’.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படம் வெளியானது.

கடவுள் சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்பதை அப்போதே சொன்ன படம் இது.

அண்மையில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் இதே கதை தான்.

தற்போது “ருத்ர தாண்டவம் 2021” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவிருக்கிறார்.

இதில் வி.கே.ராமசாமி நடித்த சிவன் கேரக்டரில் வடிவேலுவை நடிக்க வைக்க இருந்தாராம் இயக்குனர்.

ஆனால் அது நிறைவேறாமல் போகவே, தற்போது சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்..

Santhanam to act in Rudra Thandavam remake

rudra thandavam movie

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம்.

ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க எஸ்ஆர். பிரபு தயாரித்து வருகிறார்.

Rashmika Mandanna to play female lead in Suriya’s next film

rashmika mandanna

More Articles
Follows