தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் கருணாஸ் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வாகவ உள்ளார்.
இவர் ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
அப்போது தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியிருந்தார்.
அவர் பேசும் போது…
சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க அதே மாதிரி நடந்துக்குறாங்க.
அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும்
உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும்.
ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்துவிடுவோம் என பேசியுள்ளார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர்.
இதில் 2 காவல் ஆணையர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீசார் கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசார் கருணாஸை கைது செய்தனர்.
அப்போது பேசிய அவர், `அரசு திட்டமிட்டே பழிவாங்குகிறது. சிறைச்சாலைகள் எங்களுக்காகத் தான் கட்டப்பட்டுள்ளன. வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன்’ என்று தெரிவித்தார்.
கருணாசுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
Actor Karunas MLA arrested for his Controversial speech