தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வில்லன் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் உத்தமன்.
இவர் நிறைய தமிழ்ப் படங்களில் காணப்பட்டாலும் இவரது பூர்வீகம் கேரளா.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பாராமவுன்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் இவர் பணிபுரிந்துள்ளாராம்.
தமிழில் ‘கௌரவம்’, ‘பாண்டியநாடு’ `தனி ஒருவன்’, ‘பாயும் புலி’, ‘றெக்க’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘டோரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ஹரிஷ்.
இவர் 2018-ல் மும்பையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்டை திருமணம் செய்துகொண்டிருந்தார். ஆனால் அவர்கள் ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் தற்போது மலையாள நடிகை சின்னு குருவிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் ஹரிஷ் உத்தமன்.
இவர்கள் சிறப்பு திருமண சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டதாக கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது மத நம்பிக்கை இல்லாதவர்கள் மணம் செய்துக் கொள்ளும் முறையாம்.
மம்மூட்டியின் ‘கஸபா’ மற்றும் தேசிய விருது வென்ற பகத் பாஃசில் நடித்த ‘நார்த் 24 காதம்’ ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார் சின்னு குருவிலா என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Harish Uthaman and Chinnu Kuruvila enter wedlock