அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் அடுத்த நடிகர்.; 20 லட்சம் மாணவர்களுக்கு தாமு-வின் கல்விச் சேவை

அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் அடுத்த நடிகர்.; 20 லட்சம் மாணவர்களுக்கு தாமு-வின் கல்விச் சேவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dhamuதமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது..

ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது.

கல்வித் துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

கேரளாவின் மேன்மை ஆளுநர், தேசிய அங்கீகார வாரிய தலைவர், AICET யின் கட்டுப்பாட்டாளர்கள், 50 பல்கலைகழக அதிபர்கள் மற்றும் துணைவேந்தர்கள், இந்தியாவின் பல்வேறு நிறுவன தலைவர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களை கொண்ட இந்த கவுன்சில் தனது 14-வது ராஷ்டிரியா சிக்ஷா கவுரவ புரஸ்கார் மற்றும் 7-வது உயர் கல்வி உச்சி மாநாட்டை கடந்த ஏப்ரல் 19, 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது..

இந்த நிகழ்ச்சியின்போது கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர் விருது வழங்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நிகழ்ச்சி கானொளி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் பல்வேறு துறையை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல வி.ஐ.பி.கள் முன்னிலையில் ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021 (தேசிய கல்வி பெருமை விருது 2021) ஏற்பாட்டுக் குழுவுடன் விழாவின் முதன்மை விருந்தினரால் நடிகர் தாமுவுக்கு வழங்கப்பட்டது.

கல்வித் துறையில் சில முக்கியமான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, நடிகர் தாமுவுக்கு, இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆம்.. நடிகர் தாமு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கினார்.

இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும்.

2011 முதல் 2016 வரை ஐந்து ஆண்டுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மேற்பார்வையில் செயல்பட்டார் டாக்டர் தாமு.

அந்தவகையில் இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும், கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..

தமிழ் இளைஞர்களின் நலனுக்காக, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், மற்றும் 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட இந்த அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்துள்ள அனுபவமுள்ள இந்தியாவின் கல்வி ஆர்வலர் தாமு என்றால் அது மிகையில்லை..

குறிப்பாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நேசத்துக்குரிய பக்தர்களில் ஒருவரான நடிகர் தாமு, அப்துல் கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர்.

இளைஞர்களின் தனிப்பட்ட நல்வாழ்வை வளர்ப்பது மற்றும் அவர்களின் சிறந்த எதிர்காலத்தை மேம்படுத்துதல், மேலும் இளம் தலைமுறையினரால் நம் இந்தியாவை பெருமைப்படுத்த வைப்பது போன்ற உயர்ந்த குறிக்கோளுடன் கல்வி சேவை புரிந்துள்ளதற்காக நடிகர் தாமுவுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவது மிக பொருத்தமான ஒன்று.

ஏற்கனவே சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நடிகர் தாமுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த விருது அவரது கிரீடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு மாணிக்க கல் என்றே சொல்லலாம்.

Actor Dhamu’s help to poor students

பிக்பாஸ்’ கவின் – அமிர்தா நடித்த படத்திற்கு ‘லிப்ட்’ கொடுத்த சிவகார்த்திகேயன்

பிக்பாஸ்’ கவின் – அமிர்தா நடித்த படத்திற்கு ‘லிப்ட்’ கொடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan LIFT (2)ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லிஃப்ட்’.

இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார்.

ஜி மதன் படத்தைத் தொகுக்க சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் ‘லிஃப்ட்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி வினீத் வரபிரசாத் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ட்ராக் வெளியானது.

பாடலாசிரியர் ஆர் நிஷாந்த் எழுதியிருக்கும் ‘இன்னா மயிலு..’ எனத்தொடங்கும் பாடலை படத்தின் நாயகனான கவினின் நண்பரும், முன்னணி நட்சத்திர நடிகருமான சிவகார்த்திகேயன் பாடியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் குரலில் வெளியான ‘கனா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களின் பாடல்களைத் தொடர்ந்து ‘லிஃப்ட்’ படத்தின் பாடல்களும் தமிழ் திரை இசை ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பை எளிதில் எட்டிப் பிடிக்கும்.

குறிப்பாக ஐ டி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பாடலையும், பாடல் வரிகளையும் கேட்டால் அவர்களின் மனதிற்கு நெருக்கமாக அமையும்.

இந்த பாடலை பற்றி தயாரிப்பாளர் ஹேப்ஸி பேசுகையில்,’…

இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேலின் துள்ளலான மெட்டுக்கு, நிஷாந்த் எழுதிய இளமை ததும்பும் பாடல் வரிகளை, தன் மாயாஜால குரலால் அற்புதமாக பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் முகவரியாக அமைந்திருக்கும் ‘இன்னா மயிலு..’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாட சம்மதித்ததும், படக்குழுவினருக்கு உற்சாகம் பீறிட்டது.

இந்த பாடலுக்கான பதிவின்போது அவர் வருகை தந்து, எங்களுக்குள் இருந்த பதற்றத்தை தணித்து, சூழலை இனிமையானதாக்கி, எளிதாகவும், மிக நேர்த்தியாகவும் அந்தப் பாடலை பாடினார். வசீகரமான அவரின் குரலில் இந்த பாடல் வரிகளை கேட்டபோது ரசிகர்களின் ஆனந்த மனநிலையில் நான் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தோம். ‘இன்னா மயிலு..’ என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயனுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Sivakarthikeyan to sing Kavin’s Lift

பிரபுதேவா-சல்மான் கான் இணைந்த ‘ராதே’ ஓடிடி ரிலீஸ்.; ஒன் டைம் பார்க்க இவ்வளவு கட்டணமா.?

பிரபுதேவா-சல்மான் கான் இணைந்த ‘ராதே’ ஓடிடி ரிலீஸ்.; ஒன் டைம் பார்க்க இவ்வளவு கட்டணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhe salman khan prabhu devaகொரோனா 2வது அலை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்காலிக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டு கிடக்கின்றன.

எனவே சினிமா தியேட்டர்களை மீண்டும் எப்போது திறப்பார்கள்? என்பது தெரியாத நிலையே உள்ளது.

இந்த நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி நடித்துள்ள படம் ‘ராதே’.

இப்பட டிரைலர் இன்று யு டியுப் தளத்தில் வெளியானது.

இந்த படத்தை ஒரே சமயத்தில் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் மே 13ம் தேதியன்று வெளியிடுகின்றனர்.

ஓடிடி-யில் ‘ராதே’ படத்தை ஒருமுறை பார்க்க 299 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளனர்.

கடந்த வருடம் தமிழில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தை ஓடிடி தளத்தில் பார்க்க 199 ரூபாயை கட்டணமாக வசூலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Here’s How Much The Makers of Salman Khan’s Radhe Received For Its Digital Rights

இந்தியன் 2 படத்தை முடிக்கல நஷ்டம் – லைகா..; விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் எடுக்கனும் – ஷங்கர்..; நீங்களே முடிவு செய்ங்க – கோர்ட் ஆர்டர்

இந்தியன் 2 படத்தை முடிக்கல நஷ்டம் – லைகா..; விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் எடுக்கனும் – ஷங்கர்..; நீங்களே முடிவு செய்ங்க – கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ‘இந்தியன் 2’ என்ற படத்தை இயக்குகிறார் ஷங்கர்.

இதில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிஷங்கர், விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை.

2019ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் இறந்தனர்.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் சூட்டிங் தொடங்கப்படவே இல்லை.

இதனால் வெறுத்துப்போன இயக்குநர் ஷங்கர் அந்நியன் இந்தி ரீமேக் பணியில் இறங்கியுள்ளார்.

மேலும் தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் படத்தையும் இயக்கவுள்ளார் ஷங்கர்.

இதனால் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா.

இந்தியன் 2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து உள்ளதாகவும் கூறியது.

லைகா & ஷங்கர் என் இருதரப்பும் மோதிக் கொள்ளும் நிலையில் ‘இந்தியன் – 2’ பட பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவால் இந்த பிரச்சனையில் சுமூக சூழல் ஏற்படாது- நீதிபதிகள்.

இரு தரப்பும் கோர்ட்டில் தெரிவித்த கருத்துக்கள்…

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அறிவுறுத்தல்..

இந்தியன் – 2 படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கு..

கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.- லைகா.

நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது.- ஷங்கர்

வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளி வைப்பு.

Judges ask director Shankar and lyca productions to sort out Indian 2

எங்க ஸ்டெர்லைட் ஆலையை திறந்து விடுங்க.. 500 டன் ஆக்ஸிஜன் ப்ரீயா தர்றோம்.; அனுமதி வழங்க அரசு தயார்!

எங்க ஸ்டெர்லைட் ஆலையை திறந்து விடுங்க.. 500 டன் ஆக்ஸிஜன் ப்ரீயா தர்றோம்.; அனுமதி வழங்க அரசு தயார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sterlite tuticorin (2)கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து பலமுறை திறக்க அனுமதி கோரி இந்த வேதாந்தா நிறுவனம் கோர்ட்டில் முறையிட்டது.

தற்போது மீண்டும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆலையை திறக்க முறையிட்டு வருகிறது இந்த வேதாந்தா நிறுவனம்.

அதன் விவரம் வருமாறு…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் வாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த அந்த இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரித்தது உச்சநீதிமன்றம்.

மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசிடம் தெரிவித்தது.

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சுகாதாரத் தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்’ என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கறிஞர், அனுமதி வழங்கினால் 6 நாட்களில் ஆக்சிஜன் தயாரிப்போம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரிய நிலையில் வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vedanta offers to supply free oxygen from closed Tuticorin Sterlite Copper plant

சூரி & விஜய்சேதுபதி படத்திற்கு (மீண்டும்) ரஜினி படத்தலைப்பை வைத்த வெற்றிமாறன்

சூரி & விஜய்சேதுபதி படத்திற்கு (மீண்டும்) ரஜினி படத்தலைப்பை வைத்த வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viduthalai (1)இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடித்து வரும் படம் இது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘விடுதலை’ என பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதே படப்பெயரில் சிவாஜி & ரஜினி நடித்த படம் 1986ல் வெளியானது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடித்த படத்திற்கு ரஜினி படத்தலைப்பான ‘பொல்லாதவன்’ என பெயர் வைத்திருந்தார் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் விடுதலை படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், சீட் நுனியில் அமரவைக்கும், பரபர திரில்லான திரைக்கதையுடன் ரசிகர்களை அசத்தவுள்ளார்.

வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

R.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார்.

RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பிரமாண்ட முறையில், இந்தியாவெங்கும் தமிழ் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்..

Vetri maaran’s next gets Rajini film title

More Articles
Follows