சமூக நீதிக்கோட்பாட்டை கொல்ல பா.ஜ.க. திட்டம் என கருணாஸ் கண்டனம்

சமூக நீதிக்கோட்பாட்டை கொல்ல பா.ஜ.க. திட்டம் என கருணாஸ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor cum MLA Karunaas statement against BJP Govtமத்தியில் ஆளும் பாஜக. அரசுக்கு எதிராக நடிகரும் எம்எல்ஏ.வுமான கருணாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

இடஒதுக்கீடு என்பது வறுமையில் உள்ளோர் அனைவரும் பெற்றுக்கொள்ளும் இலவசத் திட்டமல்ல! மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்படும் சமூகநீதி விடுதலைக்கான திறவுகோல்!

இத்தகைய சமூக நீதிக் கோட்பாட்டை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டுமென்று பா.ஜ.க.அரசு செய்யும் சதி! மேலும் இந்த பொருளாதரா ரீதியான இடஒதுக்கீடு என்ற திட்டத்தை கையில் எடுத்திருப்பது வரவேற்க தக்கதல்ல மிகவும் கண்டிக்கத்தக்கது.

மிகவும் நுட்பமாக தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

அவர்களின் நோக்கம் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழை எளியோரை மேம்படுத்துவது என்பதல்ல; மாறாக, சமூக நீதிக் கோட்பாட்டை அழித்தொழிப்பது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு நடைமுறைப் படுத்திவிட்டால், காலப்போக்கில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சி!

வெளிநாடு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்துவதாக கடந்த தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

அதை நிறைவேற்றி இருந்தால் இந்தியாவில் இந்த நிலையேவந்திருக்காது ஏழைகளே இல்லையென்றால் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடும் தேவைப்படாது.

சமூக ரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஊழல் தான் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கும் சூழல் ஏற்படும்

வருகிற நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு இந்த சதிவேலையை நுட்பமாக செய்ய நினைக்கிறது! பா.ஜ.க. அரசு! சமூக நீதியை இவர்கள் கொலை செய்ய துணிந்துவிட்டார்கள்! நம் அதை முறியடிக்க போராடவேண்டும்!

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Actor cum MLA Karunaas statement against BJP Govt

ரசிகர்களின் ஆராதனைக்கு தகுதியானவர் அஜித்.; விஸ்வாசம் ஹீரோ ஜெகபதிபாபு பாராட்டு

ரசிகர்களின் ஆராதனைக்கு தகுதியானவர் அஜித்.; விஸ்வாசம் ஹீரோ ஜெகபதிபாபு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jagapathi Babu talks about Ajith and his Viswasam movieகிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சென்னையுடன் ஒரு பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டிருக்கும் ஜெகபதி பாபு அவர்கள் “விஸ்வாசம்” படம் அவரை தமிழ்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்கும் என நம்புகிறார்.

இது குறித்து அவர் கூறும்போது…

“வெளிப்படையாக சொல்வதென்றால் குழந்தை பருவத்தில் இருந்தே இந்த மண்ணில் ஒரு ஹிட் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன்.

நிச்சயமாக, இந்த படம் என் நீண்ட கால கனவை நிறைவேற்ற போகிறது” என்றார்.

“அஜித் சார் போன்ற ஒரு நபர் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான மனிதர்.

மக்களுக்கு பல நல்ல விஷயங்களை நிறைய செய்திருக்கிறார்.

மற்ற நபரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் அஜித் சார் போன்ற ஒரு நடிகர், அவர் ரசிகர்களிடம் இருந்து பெறும் மரியாதை மற்றும் ஆராதனைக்கு தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “விஸ்வாஸம்” படத்தில் ஹீரோ, வில்லன் என இருவருமே “சால்ட் ‘என்’ பெப்பர்” தோற்றத்தில் தோன்றுவதால், ஆரம்பத்தில் இருந்து நேர்மறையாக அதை உணர்ந்தேன்.

அஜித்தை ரசிகர்கள் அத்தகைய நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் மாஸ் மற்றும் கிளாஸ் என ஒரு கலவையை கொண்டிருக்கும்.

குறிப்பாக மாஸ் காட்சிகளை, அவரது அலப்பறையை, அப்பாவிதனத்தை அவருடைய ரசிகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் நன்றாக அனுபவிப்பார்கள்.

உண்மையில், என்னுடைய சிந்தனையுடன் அந்த கதாப்பாத்திரம் ஒத்துப் போனதால், அவரது கதாபாத்திரத்தை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினேன்.

குறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் மோதல் மிக முக்கியமாக, அவர்களின் வித்தியாசமான, வேறுபட்ட சிந்தனைகளால் நடப்பது தான். நான் என்ன நினைக்கிறேனோ, என்ன செய்கிறேனோ அது தான் சரி என நம்புகிறவன் நான். அதனால் தான் “என் கதையில நான் ஹீரோ டா” என்று வசனம் பேசுகிறேன்.

இயக்குனர் சிவா பற்றி அவர் கூறும்போது…

“சிவா மிகவும் இனிமையானவர், அவரது புன்னகை எப்போதும் உண்மையானது. சில சமயங்களில், அவர் உணர்வுகளை தனக்குள்ளே மறைத்துவிட்டு வெளியில் பாஸிட்டிவாக நடந்துகொள்கிறாரா என நான் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறேன்.

இருப்பினும், அவரது மனது மிகவும் தூய்மையானது. அது தான் அவர் செய்யும் படங்களில் பிரதிபலிக்கிறது. நயன்தாரா ஒரு அழகிய பெண், எப்போதும் எளிமையாக இருப்பவர்.

எனக்கு ‘விஸ்வாசம்’ அணியுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வேலை செய்யும் வாய்ப்பு வந்தால் நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்வேன். இந்த குழுவில் உள்ள எல்லோரும், நேர்மறையான, தூய்மையான, நல்ல இயல்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் பற்றி அவர் கூறும்போது, “அவர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கின்ற, தொழில்முறை தயாரிப்பாளர்கள். என் தந்தை தயாரிப்பாளராக இருந்த நாட்களிலிருந்தே அவர்கள் புகழ்பெற்ற பிராண்ட் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

அவர்கள் தயாரித்த இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் என்னை அன்போடும், பாசத்தோடும் நடத்தியது அவர்கள் மீதான மரியாதையை மேலும் அதிகரித்தது” என்றார்.

ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கிறார்கள்.

Jagapathi Babu talks about Ajith and his Viswasam movie

விக்ரமன் பட பாணியில் கனா படத்தில் சூப்பர் மெசேஜ்.; இளவரசு பாராட்டு

விக்ரமன் பட பாணியில் கனா படத்தில் சூப்பர் மெசேஜ்.; இளவரசு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanaa movie has social message like Vikraman movie says actor Ilavarasuசிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின் வெற்றி விழாவில் நடிகர் இளவரசு பேசியதாவது…

படத்தின் ஆரம்பத்தில் இருந்து எல்லா கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையானவை மட்டுமே.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. இந்த படத்தில் நான் நடித்த காட்சிகளும், என் கதாப்பாத்திரமும் திரைப்படத்தில் வருமா என யோசித்தேன்.

ஆனால், நிறைய பேர் மனதில் போய் சேர்ந்தேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையரங்கில் என் மகளுடன் படத்தை பார்க்கும்போது இந்த படத்தின் எமோஷனை உணர முடிந்தது.

விக்ரமன் சார் புது வசந்தம் படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை செய்திருந்தார்.

நான்கு ஆண் நண்பர்களுடன் ஒரு பெண் தங்கியிருப்பார். அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு மட்டுமே இருக்கும்.

அதே மாதிரி இந்த படத்திலும் இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு பெண் கிரிக்கெட் விளையாட போகும்போது ஆண்கள் அவளை அழைத்து விளையாட அனுமதியளித்து பயிற்சி கொடுப்பார்கள். இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்து இது” என்றார் நடிகர் இளவரசு.

Kanaa movie has social message like Vikraman movie says actor Ilavarasu

*துப்பாக்கி முனை* பட வெற்றி விழாவை கொண்டாடிய விக்ரம் பிரபு

*துப்பாக்கி முனை* பட வெற்றி விழாவை கொண்டாடிய விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabhu celebrated Thuppakki Munai success party with his teamகலைப்புலி எஸ். தாணு தயாரித்து விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் ‘துப்பாக்கி முனை’.

இப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த 25-வது நாள் வெற்றி விழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Vikram Prabhu celebrated Thuppakki Munai success party with his team

ஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..?

ஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth became Chief Minister in his upcoming movie Naarkaliசில வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் முதல்வன்.

இந்த படத்தின் கதையை முதலில் ரஜினிக்காகத்தான் எழுதினார் ஷங்கர். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே பின்னர் தான் அர்ஜீன் நடித்தார்.

அந்த படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜீன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் புதிதாக உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வராக ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.

பேட்ட படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் கதைப்படி சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர், அரசியலில் குதித்து படிப்படியாக முன்னேறி முதல்வர் நாற்காலியைப் பிடிக்கிறாராம்.

மக்களும் அவரின் ஆட்சியை விரும்பி அவரை நிரந்தர முதல்வராக ஆக்குவதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே படத்திற்கு நாற்காலி என்று தலைப்பிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் இந்த தலைப்பு வெளியாகிவிட்டதால் இதைவிட சிறந்த ஒரு தலைப்பை தேடி வருகிறதாம் படக்குழு.

ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் இதையே கூட தலைப்பாக வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் சூட்டிங் பிப்ரவரி இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

Rajinikanth became Chief Minister in his upcoming movie Naarkali

விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்னது இதுதான்

விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்னது இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith reaction after watching his Viswasam movieசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை மறுநாள் ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இதற்கு முன்பே இந்த கூட்டணி 3 முறை இணைந்துள்ளது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தை அஜித் பார்த்துவிட்டு தன் பாராட்டுக்களை சிவாவிடம் கூறினாராம்.

அவர் கூறியதை சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில்…

அஜித் சார் ஒரு சீரியஸான மனிதராக காணப்பட்டாலும் அவருக்குள் ஒரு குழந்தைத்தனம் எப்போதும் இருக்கும்.

நான் இதற்கு முன் இயக்கிய 3 படங்களில் அவரின் அந்த குணத்தை காட்டமுடியவில்லை.

முதல்முறையாக வீரமான, வெள்ளந்தியான ஆளாக விஸ்வாசம் படத்தில் வருகிறார். மாஸாக கலக்கியிருக்கிறார்.

விஸ்வாசம் படத்தை அவர் பார்த்தார். பார்த்த பிறகு, நாம் இணைந்த 4 படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்று கூறினார். அவர் அப்படி கூறியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” இவ்வாறு கூறினார்.

Ajith reaction after watching his Viswasam movie

More Articles
Follows