காதல்+பாசம்+ஹாரர் ஆகியவற்றை சொல்ல வரும் வெற்றிமாறன்

காதல்+பாசம்+ஹாரர் ஆகியவற்றை சொல்ல வரும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abi Saravanan starrer horror movie titled Vetrimaaranலுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.

அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன.

ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது.

இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்..? அதுதான் இந்தப்படத்தின் கதை.

இதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் மனோ.

குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளை கையாண்டுள்ளார்.. அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும்.

அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் அடங்குகிறதாம்..

இந்தப்படத்தின் கதையை போனிலேயே கேட்ட நடிகர் அபிசரவணன், கதையால் ஈர்க்கப்பட்டு உடனே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

தற்போது இந்தப்படம் விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. விரைவில் இசை மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

இசை: டேவிட் கிறிஸ்டோபர்
ஒளிப்பதிவு: குணசேகரன்
டைரக்சன்: மனோ
தயாரிப்பு: எம். எஸ். சுல்பிகர் / லுலு கிரியேஷன்ஸ்

Abi Saravanan starrer horror movie titled Vetrimaaran

abi saravanan new movie vetrimaaran

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் புள்ளி வெளியானது

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பர்ஸ்ட் புள்ளி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara Kolamavu Kokila aka COCO first look released‘டோரா’, ‘அறம்’ படங்களை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ‘விஜய்டிவி புகழ் ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எதுவரையோ’ பாடல் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தில் ரிலீஸாகவுள்ளது.

Nayanthara Kolamavu Kokila aka COCO first look released

இதுதானா புதிய அரசியல் மாற்றம்.? ரஜினிக்கு டிராபிக் ராமசாமி கேள்வி

இதுதானா புதிய அரசியல் மாற்றம்.? ரஜினிக்கு டிராபிக் ராமசாமி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans banners disturb issue Traffic Ramasamy raises questionசென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்க வந்தார்.

சிலைத் திறப்புக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தனர்.

அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினிகாந்த் அறிவித்த பின், அவர் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது என்பதால் அவரை வரவேற்கும் வகையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார்.

ஆரம்ப நிலையிலேயே இப்படி பேனர்கள் வைப்பவர்கள் எப்படி அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை காவல்துறையும் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது சரியல்ல.

அரசியலில் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறி வரும் நடிகர்கள் வழக்கமான அரசியல்வாதிகள் போல் நடந்துகொள்வது வேதனை அளிப்பதாகவும் டிராஃபிக் ராமசாமி கூறினார்.

இது தொடர்பான விழாவில் ரஜினி பேசும்போது… இனி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது அப்படி நடந்துக் கொள்ள கூடாது என்றார்.

மேலும் இதற்காக மக்களிடம் தான் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini fans banners disturb issue Traffic Ramasamy raises question

ரஜினி இனி சூப்பர் ஸ்டார் இல்லை; பட்டம் கொடுத்த தாணு ஏன் இப்படி சொன்னார்.?

ரஜினி இனி சூப்பர் ஸ்டார் இல்லை; பட்டம் கொடுத்த தாணு ஏன் இப்படி சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hereafter Rajini is not Super Star He is Peoples Leader says Producer Thanuநடிகர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது வழக்கம்.

இவருக்கு முதன்முதலில் சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்தவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ரஜினி முதன்முதலில் நாயகனாக நடித்த பைரவி படத்தை கலைப்புலி தாணு விநியோகம் செய்யும்போது ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்து போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் ரஜினியும் கலைப்புலி தாணுவும் கலந்துக் கொண்டனர்.

அப்போது தாணு பேசும்போது… இனி ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அல்ல. அவர் மக்களின் தலைவர்.

நாட்டையும் ஆள்வார் காட்டையும் ஆள்வார் அவருக்கு போட்டி யாரும் இல்லை” என பேசினார்.

Hereafter Rajini is not Super Star He is Peoples Leader says Producer Thanu

சே குவாரா கெட்டப்பில் சூர்யா; சர்ச்சையை கிளப்பும் செல்வராகவன்.?

சே குவாரா கெட்டப்பில் சூர்யா; சர்ச்சையை கிளப்பும் செல்வராகவன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In NGK first look Suriya get up reflects Che Guevaraசெல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இது சூர்யாவின் 36வது படமாக உருவாகி வருகிறது.

செல்வராகவன் பிறந்தநாள் என்பதால் பரிசாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு என்.ஜி.கே. எனப் பெயரிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் ‘சேகுவேரா’வின் கெட் அப்பில் சூர்யா உள்ளார்.

மேலும் என்ஜிகே என்றால் என்ன? என்பதால் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். எனவே இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடிக்க, ஜெகபதி பாபு வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படம் இந்தாண்டு 2018 தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

In NGK first look Suriya get up reflects Che Guevara

தலைவன் வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வருகிறேன்… : ரஜினி

தலைவன் வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வருகிறேன்… : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

There is No good leader in Tamilnadu so I entered in Politics says Rajiniகடந்த வருடம் 2017 டிசம்பர் 31ஆம் தேதி ஆன்மிக அரசியல் செய்ய போகிறேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

அன்றுமுதல் ரஜினியின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆன்மிக அரசியல் என்னவென்றே தெரியாமல் பலரும் பலவிதமாக பேசத் துவங்கினர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது…

தூய்மை என்பது தான் ஆன்மீக அரசியல். நேர்மையானது.

இனிமேல்தான் நீங்கள் ஆன்மிக அரசியலை பார்க்கப் போகிறீர்கள்.

கருணாநிதி போன்ற ஒரு எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த அரசியல் ஞானி இந்தியாவிலேயே கிடையாது.

13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் கட்சியைக் கட்டிக்காத்தார்.

இதேபோல் இந்தியாவிலேயே கட்சியைக் கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.

இதுநாள் வரை அரசியலுக்கு வராத நீங்கள் ஏன் இப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என்கிறார்கள்.?

இந்த 67 வயதில் அரசியலுக்கு வரவேண்டியுள்ளது. ஆமாய்யா தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன்.” என்று அதிரடியாக மனதில் உள்ளதை பட்டென பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த்.

There is No good leader in Tamilnadu so I entered in Politics says Rajini

More Articles
Follows