ஆஸ்கர் விருது பெற்ற பட ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & யோகிபாபு

ஆஸ்கர் விருது பெற்ற பட ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aamir Khan Vijay Sethupathi and Yogi babu to team up for Bollywood remakeஆங்கிலத்தில் வெளியாகி ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படம் மக்கள் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் ஆஸ்கர் அவார்ட்டையும் வென்றது.

இதன் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் தமிழராக விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்த நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் யோகிபாபுவிடம் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம்.

ஏற்கெனவே ஆண்டவன் கட்டளை, ஜீங்கா உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதியுடன் யோகிபாபு இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

Aamir Khan Vijay Sethupathi and Yogi babu to team up for Bollywood remake

பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா… ‘மாஃபியா’ டீமுக்கு ரஜினி பாராட்டு

பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா… ‘மாஃபியா’ டீமுக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth appreciates Mafia movie teaser and Team`துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அவர்கள் நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார்.

அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து நாடகமேடை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதுவும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றப் பின்னணியில் ‘மாஃபியா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்பட டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

டீசரை பார்த்துவிட்டு பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

இதனை கார்த்திக் நரேன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Rajinikanth appreciates Mafia movie teaser and Team

ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.

இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய,

அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர், பல விளம்பரப் படங்களை இயக்கி,இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய
ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.
சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கடும் தாக்கு !

அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கடும் தாக்கு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)ஜெமினி சினிமாஸ் ஜெனிமி ராகவா மற்றும் GEMS பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ஆண்கள் ஜாக்கிரதை. K.S முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது,

“ஜெமினி ராகவா தயாரிப்பாளராக தான் எனக்கு அறிமுகமானார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருப்பார் என்பது இப்போது தான் தெரிகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது,

“ஜெமினி ராகவா சினிமாவை நேசிக்க கூடியவர். சினிமா நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். அவர் இந்தப்படத்தை பட்ஜெட்டுக்குள் முடித்துவிட்டேன் என்றார். இயக்குநரும் அவரும் ஒன்றாக வந்து அதைப் பெருமையோடு சொன்னார்கள். படத்தின் ட்ரைலர் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

“ஆண்கள் ஜாக்கிரதை. எப்போதுமே ஆண்கள் ஜாக்கரதையாகத் தான் இருக்கணும். ஏன்னா இப்போ மீடூ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத்தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். ட்ரைலரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்பார் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது. ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசு செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்

இயக்குநர் பிரவீன்காந்த் பேசியதாவது,

“. வைரமுத்து தமிழ்சினிமாவில் முக்கியமான ஆள். எல்லாராலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞனை இப்படி பண்ணி இருக்க வேண்டாம் என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது. அதை மட்டும் முடிந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். இதுபோன்ற சின்னப்படங்கள் நிறைய வரவேண்டும். இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது,

“ராகவா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். அவர் நல்ல மனிதர். அதனால் இப்படம் நல்லா தான் வரும். இப்படத்தின் நாயகிகள் எல்லாம் ரொம்ப ஜாலியா துணிச்சலாவும் நடிச்சிருக்காங்க. க்யூப் விசயத்தில் வரவிருந்த ஒரு உதவியை விசால் தான் தடுத்தார் என்று ராகவா சொன்னார். சின்னப்படங்கள் 100 படங்களுக்கு தயவுசெய்து தியேட்டகர்கள் கிடைக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்” என்றார்

தயாரிப்பாளர் தேனப்பன் பேசியதாவது,

“ராகாவாவின் உழைப்பு இப்படத்தில் நன்றாக தெரிகிறது. கேமராமேன் இசை அமைப்பாளர் உள்பட எல்லாரும் நல்லா உழைத்து இருக்கிறார்கள். இந்தப்படம் வெற்றி அடையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்றார்

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசியதாவது,

“இத்தயாரிப்பாளர் நடிப்பிற்காக தன்னை மிக அழகாக உருமாற்றி இருக்கிறார். மேலும் இப்படத்தில் உள்ள அனைவருமே தங்களின் உழைப்பைச் சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்” என்றார்

நடிகர் பாபுகணேஷ் பேசியதாவது,

“ராகவா ரொம்ப நல்லவர். விசால் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றிபெற இந்த ராகவா தான் காரணம்..பெரிய கதாநாயகிகள் எல்லாம் ஒரு விசயத்தை உணரவேண்டும். பெரிய நாயகர்கள் கூடத்தான் நடிப்பேன் என்று அவர்கள் அடம் பிடிக்கக்கூடாது. நல்ல கதை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். இப்படத்தில் வைரமுத்துவைப் பற்றி விமர்சித்து இருக்கிறார்கள். அது கதைக்கு தேவை என்பதால் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். மேலும் அண்ணன் கே.ராஜன் சென்சாரில் லஞ்சம் இருக்கிறது என்றார். மோடி ஆட்சியில் லஞ்சமே இல்லை. ஏன் என்றால் எல்லா பணப்பரிவர்த்தனையும் இப்போது ஆன்லைனில் தான்” என்றார்

இயக்குநர் K.S முத்து மனோகரன் பேசியதாவது,

“என் வளர்ச்சிக்கு காரணமானவர்களை முதலில் வணங்குகிறேன். தயாரிப்பாளர்கள் முருகானந்தம் மற்றும் ராகவா இல்லை என்றால் இப்படம் இல்லை. இந்தப் படத்தில் துணிச்சலாக நடித்த ஹீரோயின்களை பாராட்டுகிறேன். சிவகுமாரின் வொர்க் மிக அசாயத்தியமாக இருக்கிறது. இசை அமைப்பாளருக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உண்டு. இந்தப்படத்தைப் பற்றி மற்றவர்கள் நிறையப்பேசி விட்டார்கள். இனி நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும். இப்படத்தை வாங்கி வெளியீடும் சுஜித் சாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

தயாரிப்பாளர் ஜெமினி ராகவா பேசியதாவது,

“ரொம்ப கஷ்டப்பட்டு இப்படத்தை தயாரித்து இருக்கிறோம். இதைச் சின்னபடம் என்று நினைக்காமல் மக்களிடம் இப்படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர்கள் – தொழில்நுட்ப கலைஞர்கள்

முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – M.P.சிவகுமார்

இசை – பாலகணேஷ்

எடிட்டிங் – G.V.சோழன்

விளம்பர வடிவமைப்பு – அயனன்

இணை தயாரிப்பு – க.முருகானந்தம்.

தயாரிப்பு – ஜெமினி ராகவா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன்

நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்!

நிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)துருவா , இந்துஜா நடிப்பில் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டூப்பர்’. முழுநீள கமர்சியல் பேக்கேஜ் ஆக உருவாகியிருக்கிறது இப்படம் .

வணிகப் பரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தில் இடம்பெறும் ஜில் ஜில் ராணி என்ற பாடலை இணைய வெளியில் உலவ விட்ட சில நிமிடங்களில் லட்சத்தைத் தாண்டி இரண்டாவது லட்சம் அடுத்தடுத்த லட்சம் என்று எகிறுகிறது.

சினிமா என்பது கலாபூர்வ வடிவம் என்பது ஒரு பக்கம் . சினிமா என்பது கொண்டாட்ட வடிவம் என்பது இன்னொரு பக்கம் .கவலைகள் போக்கும் கொண்டாட்டமே சினிமா என்கிற வகையில் உருவாகியிருக்கும் முழுநீள வணிகப் படம்தான் ‘சூப்பர் டூப்பர்’ எனவே தான் இந்த பாடல் காட்சிக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பட நாயகி இந்துஜா ,’ஜில் ஜில் ராணி ‘பாடலுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் இந்துஜா நடித்த ‘மேயாத மான்’, ’40 வயது மாநிறம்’ ,’மகாமுனி’ போன்ற படங்களில் குடும்பப் பாங்காகத் தோன்றினார். இந்த ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் தைரியசாலிப் பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக வருகிறார் . சுயவிருப்பமுள்ள பெண்ணாக வருகிற அவர், தன் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார். .அதற்கான வரவேற்பு ரசிகர்களால் இப்பாடலின் மூலம் கிடைத்திருக்கிறது.

‘ஜில் ஜில் ராணி ‘பாடலுக்கு “லைக்”குகள் பெருகி வழிவதும்
” ஷேர்”கள் குவிவதும் இந்தப் பாடல் பார்வையாளர்களால் ,ரசிகர்களால் ஆதரித்து ஆராதிக்கப்பட்டு வருகிறது என்று கூற வைக்கிறது.

‘சூப்பர் டூப்பர்’ படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு முன்னோட்டமாக இப்பாடலின் வரவேற்பு அமைந்திருக்கிறது எனலாம்.

“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி

“இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 22௦ விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும் சார்’ என்கிற படம் எல்லாம் வரும்போது, ‘வீராபுரம் 22௦’ என்கிற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது.. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும்போதுதான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும்.

தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை கொண்டு வருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அப்படி செய்யும்போதுதான் வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.. நடிகர்கள் சம்பளம் பற்றி பல காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும்.. நான் அப்படித்தான்.. என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன்..

எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும்.. சினிமா இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால் வீட்டிலிருந்தபடியே அமேசான், நெட்பிளிக்ஸ ஆகியவற்றின் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே ஒரு தியேட்டர் உருவாகும் சூழல் வந்துவிட்டது. இந்த மாதிரியான வியாபார முறைகளால் சினிமா வளமாகத்தான் இருக்கும்.. ஆனாலும் அதன் பலன்கள் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை.. அதனால் அடுத்து நல்ல கதையை, புதிய கதைக்களங்களை, இன்றைக்குள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்.. வழக்கமான பார்முலாவிலேயே படமெடுத்தால் இனிவரும் நாட்களில் அது ஓடுமா என்பது கேள்விக்குறிதான். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள். அதனால் வரும் நாட்களில் தியேட்டர்கள் இருந்தாலும் தியேட்டர்களை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சூழல் மாறும்.. இதனை தியேட்டர் அதிபர்களும் உணரவேண்டும்’ என்றார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘படத்தின் ஆர்ட் டைரக்டர் டாஸ்மாக் போல தத்ரூபமாக செட் போட்டதாகவும் உண்மையிலேயே அதை டாஸ்மாக் கடை என நினைத்துக்கொண்டு சிலர் தண்ணியடிக்க வந்துவிட்டதாகவும் கூறினார்கள்.. இதற்கு இவ்வளவு செட் எல்லாம் போட தேவையில்லை.. டாஸ்மாக் என்று ஒரு போர்டு வைத்தாலே போதும்.. உடனே உள்ளே வந்து விடுவார்கள்.. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் க்யூவில் நின்று மதுவை வாங்கி குடிக்கிறார்கள்..

இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் ரித்தேஷ், ஸ்ரீதர் இருவரும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போல புகழ் பெறுவார்கள்.. இதில் விஸ்வநாதன் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்.. ராமமூர்த்தி பேசமாட்டார் என்று சொல்வார்கள்.. அதேபாணியை நீங்கள் இருவரும் கடைபிடிக்க வேண்டும்.. வீராபுரம் 220 என பின்கோடு சேர்த்து டைட்டில் வைத்துள்ளது பாராட்டுக்குரியது.. இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் வெளியானபோது அதில் இடம்பெற்ற முருங்கைக்காய் மேட்டரால், தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் லாபம் பார்த்தனர்.. ஆனால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.. எங்களது தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய்களை கொண்டு போய் விற்பதற்கு ரொம்ப சிரமப்பட்டோம்..

சந்திராயன்-2 விண்கலம் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது.. அதில் தற்போது சிறிய பிழை மட்டும் நிகழ்ந்துவிட்டது.. அதற்காக அதை கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.. சந்திராயன்-2 நம் இந்தியாவின் கெளரவம்.. பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு செல்வதை கூட நீங்கள் கிண்டல் செய்து கொள்ளுங்கள்.. சந்திராயன் நிலவுக்கு செல்வதை தயவுசெய்து விமர்சிக்காதீர்கள்” என்றார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “தியேட்டர்களில் ஆன்லைன் கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இதன் பலன் கிடைப்பதில்லை.. அதனால் தான் அரசாங்கமே இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை தனது கையில் எடுத்திருக்கிறது. இது யாரையும் மிரட்டுவதற்காக இல்லை.. நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சிதான்.. இதன்மூலம் 500, 1000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க முடியாது. பெரிய ஹீரோக்கள் தங்களது வியாபாரத்தை பார்த்து தாங்களாகவே நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.

ஹாலிவுட் ஹீரோக்கள் சம்பளம் வாங்குவது போல ஆரம்பத்தில் 10% தொகையை வாங்கிக்கொண்டு பின்னர் படம் வெளியாகி அதன் மூலம் கிடைக்கும் வசூலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மீதி சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள்.. ஆனால் அதுவே அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.. இது உண்மையிலேயே நடிகர்களுக்கு ஏற்ற திட்டம்தான்.. அதற்கு நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால்தான் சினிமா நல்லபடியாக இருக்கும்.. என் வீட்டினர் தியேட்டருக்கு போய் க்யூவில் நின்று படம் பார்ப்பதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு நெட்பிளிக்ஸில் தான் படம் பார்க்கிறார்கள்..

சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வியாபார புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதன் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகையை விட தியேட்டர்கள் வினியோக உரிமை மூலம் கிடைத்த தொகை குறைவு.. இதிலிருந்து பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் மூலம் வரும் வருமானம் குறைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது. எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக பாக்யராஜ் வந்த பிறகுதான் அதன் பவர் என்னவென்று முழுவதுமாக தெரியவந்துள்ளது” என்றார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜ் ஏற்கனவே எடுக்கப்பட்ட கால்வாசியில் நின்ற படத்தை தைரியமாக முன்வந்து தனது கையில் எடுத்து முழுப்படத்தையும் முடித்துள்ளார்.. சினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர் சென்டிமெண்ட் பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் மணல் கொள்ளையை மையமாக கொண்டது என்பது தெரிகிறது. அதேசமயம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை இதெல்லாம் தெரிந்துதான் இந்தக் கதையை அவரிடம் இயக்குனர் செந்தில்குமார் சொன்னாரா..? இல்லை, அட.. இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்த படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்து விட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்..

இந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன.. இந்த படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போல சைட் அடிக்கலாம் போலவே இருந்தது.. ஆர்வி.உதயகுமார் சொன்னதை கெட்டு சிரிப்புத்தான் வருகிறது. அரசாங்கமே ஆன்லைனில் டிக்கெட் முறையை கொண்டு வந்தாலும் அதிலும் பலர் மொத்தமாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பார்கள்.. அதிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது.. நல்ல படத்தை எடுக்க வேண்டும்.. அது நல்ல வினியோகஸ்தர்களிடமும் திரையரங்குகளிலும் கொடுக்க வேண்டும். இதற்கு முந்தைய விழாவில் பேசியபோது கஞ்சா குடித்தது பற்றி சொல்லப்போக அது வேறு விதமாக பரவிவிட்டது.. இளம் வயதில் தப்பு பண்ணும் சூழ்நிலைகள் எல்லோருக்கும் வரும்.. அதிலேயே இருந்து விடாமல், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகவே அதை பற்றி சொன்னேன்” என்று கூறினார்.

More Articles
Follows