தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தன்னை கேலி செய்ததாக கூறி ஜி.வி.பிரகாஷ், RJ பாலாஜி ஆகிய இருவரையும் கேள்வி கேட்டு தாக்கி இருந்தார்.
இதற்கு ஆதரவாக சிலர் பேசினாலும், சில ரசிகர்கள் இவரை கேலி செய்துள்ளனர்.
இதனால் உணர்ச்சி வசமான லட்சுமி சமூக வலைத்தளங்களிலிருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதில்… தனக்கு ஆதரவளித்தவர்களுக்கும், தன்னை காயப்படுத்தியவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Coming out of all social media NOW…Thanks to all my supporters & Best wishes to those who hurt me & insulted me:) Good luck & Bye