ரஜினி-கமலை தலைவர்களாக ஏற்க முடியாது…- லட்சுமி ராமகிருஷ்ணன்

ரஜினி-கமலை தலைவர்களாக ஏற்க முடியாது…- லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lakshmi Ramakrishnanரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அதிரடி பேச்சுக்களால் தமிழகம் அரசியல் வட்டாரம் சூடுபிடித்துள்ளது.

அவர்கள் அரசியல் களத்திற்கு வரட்டும். ஒரு கை பார்ப்போம் என்று கூறும் அரசியல்வாதிகளை விட அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற கருத்தே பரவலாக உள்ளது.

இந்நிலையில் திரையுலகை சேர்ந்த இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கமல் மற்றும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருக்கிறார்.

அதில் ரஜினி மற்றும் கமல் இருவரும் நடிகர்கள்தான். அவர்கள் தலைவர்கள் இல்லை.

அவர்களை அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளமுடியாது.” என தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

I cant accept Rajini and Kamal as political leaders says Lakshmi Ramakrishnan

டாப் ஹீரோக்கள் வரிசையில் தரமணி படம் இணைந்தது

டாப் ஹீரோக்கள் வரிசையில் தரமணி படம் இணைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Taramani stillsதங்கமீன்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதை பெற்று தந்த இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தரமணி.

இப்படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் சார்ப்பில் சதீஷ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் விளம்பரங்களே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் இது இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் கலாச்சாரம் பற்றி பேசும் படம் என தெரியவந்துள்ளதால் எதிர்பார்ப்பு எல்லை கடந்துள்ளது எனலாம்.

எனவே இளைஞர்களின் பல்ஸ் அறிந்த ஜிகே சினிமாஸ் தியேட்டர் நிர்வாகம் முன்னணி ஹீரோக்களுக்கு ஒதுக்கும் சிறப்பு காட்சிளை இப்படத்திற்கு ஒதுக்கியுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை போரூர் ஜிகே சினிமாஸ் தியேட்டரில் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது

ஓவியா இல்லாமல் வெறிச்சோடும் பிக்பாஸ்; கமலின் அடுத்த திட்டம்

ஓவியா இல்லாமல் வெறிச்சோடும் பிக்பாஸ்; கமலின் அடுத்த திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss oviyaபிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுக்க பிரபலமானாலும் தமிழகத்தில் பிரபலமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று உலகநாயகன் கமல்ஹாசனும் மற்றொன்று நடிகை ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டுக்களுமே காரணம்.

ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டு எனக்கு கிடைத்திருந்தால் நான் தமிழகத்தில் ஆட்சி செய்திருப்பேனே என ஒரு கட்சி தலைவரே கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை கடந்த நிலையில் திடீரென இதிலிருந்து வெளியேறுவதாக கூறி ஓவியா விலகினார்.

ஆனால் ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் இப்போது அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு கிடைப்பதில்லை.

எனவே வைல்ட் கார்டு மூலம் ஓவியாவுக்கு ரீஎண்ட்ரி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் பிக்பாஸ் குழுவினர்.

Exclusive: காலா படத்தில் ரஜினிக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன உறவு.?

Exclusive: காலா படத்தில் ரஜினிக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன உறவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini samuthirakaniதனுஷ் தயாரிப்பில் உருவாகும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

ரஞ்சித் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இதில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் சமுத்திரக்கனியின் கேரக்டர் குறித்த தகவல் வந்துள்ளது.

இவர் ஈஸ்வரிராவின் சகோதரனாக நடிக்கிறாராம்.

எனவே ரஜினிக்கு சமுத்திரக்கனி மச்சான் என தெரியவந்துள்ளது.

The relationship between Rajini and Samuthirakani in Kaala

இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு டபுள் மெர்சல் ட்ரீட்

இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு டபுள் மெர்சல் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal vijay artஅட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல்.

இப்படத்தில் விஜய் ஏற்றுள்ள இரண்டு கேரக்டர்களின் ஸ்டில்கள் வெளியாகிவிட்டன.

ஆனால் 3வது ஸ்டில் பற்றிய பல செய்திகள் வந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவில்லை.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி 5 மணிக்கு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிடவிருக்கிறார்களாம்.

இத்துடன் சிங்கிள் ட்ராக் (சாங்) வெளியாகவுள்ள தேதியை வெளியிட இருக்கிறார்களாம்.

இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆகஸ்ட் 20ஆம் தேதி மற்ற பாடல்கள் வெளியாகிறது.

Mersal single track announcement with 3rd look poster

மிஷ்கின்-விஷால் இணைந்துள்ள துப்பறிவாளன் ரிலீஸ் தேதி

மிஷ்கின்-விஷால் இணைந்துள்ள துப்பறிவாளன் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals Thupparivaalan release date is hereமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் துப்பறிவாளன்.

விஷாலுடன் அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ் .ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று பாடிய கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் பெயரைத்தான் விஷாலுக்கு இப்படத்தில் வைத்துள்ளார் மிஷ்கின்.

இந்நிலையில் இப்படத்தை செப்டம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

Vishals Thupparivaalan release date is here

More Articles
Follows