தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நவ்யா நாயர்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘இஷ்டம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து, 2004 இல் வெளியான ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நடிகர் பிரச்சன்னாவுடன் இணைந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகாமானார்.
‘பாசக்கிளிகள்‘, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி‘, ‘மாயக்கண்ணாடி‘, ‘அமிர்தம்‘, ‘சில நேரங்களில்‘, ‘ஆடும் கூத்து‘, ‘ரசிக்கும் சீமானே‘, ‘ராம் தேடிய சீதை‘ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010 இல் சந்தோஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
நவ்யா நாயர் திருமணத்திற்குப் பிறகு ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்தார்.
மீண்டும் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுக்க நினைத்த நவ்யா நாயர் ‘ஜானகி ஜானே’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை நவ்யா நாயர் உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
‘ஜானகி ஜானே’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக அவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் அப்போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நடிகை நவ்யா நாயர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
actress navya nair admitted to hospital







