தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ‘டைகர் கார்டன்’ தங்கதுரை பேசும்போது..
”பொங்கல் பண்டிகை நேரத்துல உங்களையெல்லாம் சந்திக்கிறது மகிழ்ச்சியா இருக்கு.
இப்போ ரிலீஸாகியிருக்கிற ‘துணிவு’ படத்துல ஒரு சின்ன முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். படம் நல்லா போய்க்கிட்டிருக்கு.
எல்லாத்துக்கும் உங்க அன்பும் ஆதரவுதான் காரணம். தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். உங்க ஆதரவு தேவை. நீங்கதான் எங்களை உயர்த்தணும்” என்றார்.
பேச்சினிடையே சங்கத்தின் உறுப்பினர்கள் ரசிப்பதற்காக சில ஜோக்குகளை சொன்ன தங்கதுரை, ‘குளிக்க முடியாத ஆறு எது?’ ‘நடக்கவே முடியாத பூச்சி எது?’ ‘மரமில்லாத காடு எது?’ என்றெல்லாம் கேட்டு பதில் சொல்ல வைத்து விழாவை கலகலப்பாக்கினார்.
விழாவில் ‘கலைமாமணி’ தேவிமணி, ராதா பாண்டியன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கெளரவித்தனர்.
TMJA pongal celebration speech in Thangadurai





