தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள படங்களில் நடித்து பிரபலமான பாலா சிங் அவர்கள் நாசரின் ‘அவதாரம்’ பட மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.
அதன்பின்னர் ’புதுப்பேட்டை’, ‘இந்தியன்’, ’பிரிவோம் சந்திப்போம்’, ‘கிரீடம்’, ’உதயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வில்லன், குணச்சித்திரம் என்று அனைத்து வேடங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான என்ஜிகே, மகாமுனி படங்களில் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் பாலாசிங்குக்கு தற்போது 67 வயதாகிறது. இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் ஆகும்.
இவரின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
Tamil actor Bala Singh passes away