தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பத்து நிமிட காட்சிகளை ஒரு நிமிடத்தில் சொல்லி முடிப்பவர் டைரக்டர் ஹரி. இதனால் இவருக்கு கோலிவுட்டில் ஓவர் ஸ்பீடு டைரக்டர் என்ற பெயரும் உண்டு.
மேலும் டாடா சுமோ இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது எனவும் கூறியிருந்தார். குறைந்த பட்சம் 50 கார்களையாவது பறக்க விடுவார்.
விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதன்முறையாக ஜெயம் ரவியை இயக்கவுள்ளாராம்.
சிங்கம் பட பாணியில் அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படம் ஜூன் 21-ல் திரைக்கு வருகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு தனி ஒருவன் 2.. அதன்பின்னர் ஹரி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என கூறப்படுகிறது.
Director Hari and Jayam Ravi team up for new venture