எக்ஸ் லவ்வர்ஸ் புது ஜோடியுடன் மீட்டிங்: பிரியதர்ஷினியின் புது ஐடியா!

எக்ஸ் லவ்வர்ஸ் புது ஜோடியுடன் மீட்டிங்: பிரியதர்ஷினியின் புது ஐடியா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priyadharshiniVIBGYOR க்ரியேடிவ்ஸ் வழங்கும் பொன்மாலை பொழுது என்கிற குறும்படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்துள்ளார் பிரியாதர்ஷினி.

தந்தி டிவி உட்பட சில சேனல்களில் ப்ரீலான்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக, அதன்பின் விளம்பரப்படங்களில் உதவியாளராகவும் பணிபுரிந்த இவரது இயக்குனர் கனவுக்கு ஆரம்ப விதை போட்டுள்ளது இந்த ‘பொன்மாலை பொழுது’ குறும்படம்…

சமீபத்தில் இந்த குறும்படம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட திருவிழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார் பிரியா.

குறும்பட திருவிழாவில் கலந்துகொள்வதற்கான படமாக இதை எடுக்கவில்லை என்றாலும், இதை பார்த்தவர்கள் கொடுத்த உற்சாகத்தினால் விழாவிற்கு அனுப்பியதாக கூறுகிறார் பிரியா.

முன்னாள் காதலர்கள் இருவர் ஏதேச்சையாக ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக்கொள்கிறார்கள்.. ஆனால் அவர்களின் புது ஜோடிகளுடன்.

அந்த 15 நிமிட சந்திப்பில் இருவருமே மைன்ட் வாய்ஸ் மூலமாக கடந்தகாலத்தை அசைபோடுகிறார்கள்.

அதில் என்ன பேசிக்கொள்கிறார்கள்..? அவர்கள் மீண்டும் சேருவார்களா மாட்டார்களா என்பதுதான் இந்த குறும்படத்தின் கதை..

பிரியாவும் அவரது நண்பர் கலேஷும் இதேபோல ஒரு காபிஷாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்த கான்செப்ட் தோன்றவே, அங்கேயே அமர்ந்தபடி அதற்கான மொத்த வசனங்களையும் பேசி முடிவுசெய்து விட்டார்களாம்.

இந்த குறும்படத்தில் முன்னாள் காதலர்களாக, மோகன் ராஜாவால் தனி ஒருவன் படத்தில் அறிமுகமாகிய த்யேட்டர் ஆர்டிஸ்ட் கலேஷ் ராமானந்த மற்றும் மாடல் லாவண்யா நடித்துள்ளனர்.

இன்றைய காதலர்கள் பெரும்பாலும் பிரிவதற்கு காரணம் வெளியில் எதிர்மறையாக இருக்கும் விஷயங்களை விட அவர்களுக்குள்ளேயே இருக்கும் ஈகோ, எதிர்மறை எண்ணம் தான் உண்மையான காரணம் என்கிற விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் பிரியா.

சிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் பாடல் தலைப்பா.? என்ன சொல்கிறார் ராஜேஷ்..?

சிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் பாடல் தலைப்பா.? என்ன சொல்கிறார் ராஜேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and rajeshஎம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.

ஆனால், இந்தச் செய்தியை இயக்குநர் ராஜேஷ் ட்விட்டரில் மறுத்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்றும், அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செல்லப் பிராணிகளால் உலகளவில் பேசப்படும் “பரியேறும் பெருமாள்”

செல்லப் பிராணிகளால் உலகளவில் பேசப்படும் “பரியேறும் பெருமாள்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pariyerum perumalபொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள்.

அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து புதுமையான விளம்பரங்கள் செய்வார்கள்.

ஆனால் பலவகையான க்யூட்டான செல்லப் பிராணிகளால் வைரலாகிக் கொண்டிருக்கிறது, பரியேறும் பெருமாள் திரைப்படம்.

பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி எனும் நாய், கதாநாயகன் கதிரின் நண்பன் என்று சொல்லும் அளவுக்கு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறது.

அதை வைத்து பரியேறும் பெருமாள் பெட் (#PariyerumPerumalPet) என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுங்கள் என்று பரியேறும் பெருமாள் படக்குழுவினர் அழைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உள்பட உலகமெங்கிலும் உள்ள பலர் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுடன் புகைப்படம் எடுத்து அந்த செல்லப்பிராணிகளுக்கும் அவர்களுக்கும் உள்ள சுவாரஸ்யமான உறவையும் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்பத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ர்.

கதிர், ஆனந்தி, மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர்.

சந்தேஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

மம்மூட்டி-வரலட்சுமி இணைந்த “பேராசிரியர் சாணக்யன்” ட்ரைலர் இன்று ரிலீஸ்

மம்மூட்டி-வரலட்சுமி இணைந்த “பேராசிரியர் சாணக்யன்” ட்ரைலர் இன்று ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mammoottys Perasiriyar Chanakyan trailer will be released 24th September 5pmஅஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்மூட்டி, உன்னி முகுந்தன், முகேஷ், வரலட்சுமி, மஹிமா நம்பியார், பூனம் பஜ்வா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர் பீஸ்.

தீபக் தேவ் இசையமைத்திருந்த இப்படத்தை சி. எச். முகம்மது தயாரித்திருந்தார்.

வினோத் இளம்பள்ளி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜான்குட்டி எடிட்டிங் செய்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இப்படம் கேரளாவில் ரிலீஸானது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை விரைவில் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் சி. எச். முகம்மது.

தமிழில் இப்படத்தை “பேராசிரியர் சாணக்யன்” என்ற பெயரில் வெளியிடுகின்றனர்.

மம்மூட்டி பேராசிரியராகவும், வரலட்சுமி போலீஸ் அதிகாரியாகவும், மஹிமா நம்பியார் மாணவியாகவும் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் பூனம் பஜ்வா நடித்துள்ளார்.

மம்மூட்டிக்கும் வரலட்சுமிக்கு நடக்கும் மோதல் காட்சிகள் படத்தின் ஹைலைட்ஸ்.

விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

எனவே இப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணிக்கு இணையத்தில் வெளியிடவுள்ளனர்.
தமிழ் பதிப்புக்கான வசனத்தை பிரபாகர் எழுதியுள்ளார்.

படத்தில் 5 பாடல்கள் மற்றும் 5 அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளதாம்.

ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா, பீட்டர் ஹெயின் உள்ளிட்ட 5 சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் வடிவமைத்துள்ளனர்.

அதுபோல் 5 பாடல்களையும் 5 நடன இயக்குனர்கள் வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15 கோடியில் தயாரிக்கப்பட்ட உலகமெங்கும் இப்படம் 35 கோடிவரை தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர்.

அந்த கல்லூரி மாணவர்களுக்கு மற்ற நபர்களால் ஏற்படும் பிரச்சினைகளை பேராசிரியர் எப்படி முறியடிக்கிறார்? என்பது படத்தின் கதை.

மலையாளத்தை போல தமிழிலும் இப்படத்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது படக்குழு.

Mammoottys Perasiriyar Chanakyan trailer will be released 24th September 5pm

நிலச்சரிவு காரணமாக கார்த்தி பட சூட்டிங் நிறுத்தம்; ரூ. 1 1/2 கோடி நஷ்டம்!

நிலச்சரிவு காரணமாக கார்த்தி பட சூட்டிங் நிறுத்தம்; ரூ. 1 1/2 கோடி நஷ்டம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthis Dev Shooting Cancelled In Kulu Manali Due To Incessant Heavy Landslidesகார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது.

கன மழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதை பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது…

தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம்.

ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார், பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன்.

வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது.

இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.

பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள் , சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.

23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும்.

அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது என்றார் நடிகர் கார்த்தி.

இந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு 11/2 கோடிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Karthis Dev Shooting Cancelled In Kulu Manali Due To Incessant Heavy Landslides

Karthis Dev Shooting Cancelled

ரஜினியின் *பேட்ட* ரிலீஸ் ப்ளான்.; அஜித்-சூர்யா படங்களுக்கு ஆபத்து.?

ரஜினியின் *பேட்ட* ரிலீஸ் ப்ளான்.; அஜித்-சூர்யா படங்களுக்கு ஆபத்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith suriyaரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது லக்னோவில் நடந்து வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்தீக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை அடுத்த 2019ல் பொங்கலுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரு வேளை இது உறுதியாகும் பட்சத்தில் மற்ற படங்களின் வெளியீடு தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகும்.

அதாவது அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே படங்களையும் 2019 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இவையில்லாமல் வருகிற நவம்பர் 29ஆம் தேதியின் ரஜினியின் 2.0 படம் வெளியாகிறது. எனவே வெறும் 45 நாட்கள் இடைவெளியில் ரஜினியின் இரு படங்கள் வெளியாகுமா? என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.

Rajinikanths Petta release may affect Ajith and Suriya movies

More Articles
Follows